பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு வாபஸ் மற்றும் சரக்கு - சேவை வரிச் சட்டம் போன்றவற்றால் உருவான பாதிப்பிலிருந்து இந்திய பொருளாதாரம் மீண்டுள்ளதாக என உலக வங்கி கூறியுள்ளது.
இந்த சீர்திருத்தங்களால் இந்திய பொருளாதாரம் 2018-ம் ஆண்டில் 7.3 சதவீத பொருளாதார வளர்ச்சி பெறும் மேலும் 2019-ம் ஆண்டில் 7.5 சதவீத வளர்ச்சியை எட்டும் என உலக வங்கி கணித்துள்ளது.
இதுகுறித்து தெற்காசிய பொருளாதார அரையாண்டு அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இதில்,
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் மற்றும் ஜிஎஸ்டி என்கிற சரக்கு - சேவை வரிச் சட்டம் அமல் ஆகியவை பொருளாதாரத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியதுடன், ஏழைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியது. தற்போது, அதிலிருந்து இந்திய பொருளாதாரம் மீண்டுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சி தென் ஆசிய சந்தையை வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்லும், இதன் மூலம் சீனாவிடம் இழந்த வேகமாக வளரும் பொருளாதார நாடு என்ற பெயரை இந்தியா மீண்டும் பெறும்.
2017-ம் ஆண்டில் 6.7 சதவீத வளர்ச்சியுடன் இருந்த இந்திய பொருளாதாரம், 2018-ம் ஆண்டில் 7.3 சதவீதமாக இருக்கும். 2019 மற்றும் 2020-ம் ஆண்டில் 7.5 சதவீத வளர்ச்சி பெறும் என கூறப்பட்டுள்ளது.