Work from Home நியமங்கள்: IT மற்றும் BPO பணியாளர்களுக்கு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு!!

IT மற்றும் BPO நிறுவனங்களுக்கு வீட்டிலிருந்து அலுவலகப் பணிகளைச் செய்யும் Work from Home வசதிக்கான இணைப்பு விதிமுறைகளை டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளதாக அரசாங்கம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 22, 2020, 10:33 AM IST
  • தற்போதைய நிலவரப்படி IT துறையில், சுமார் 85 சதவிகிதம் பேர் வீட்டிலிருந்தே பணிபுரிந்து வருகின்றனர்.
  • முக்கியமான செயல்பாடுகளைச் செய்பவர்கள் மட்டுமே அலுவலகங்களுக்குச் செல்கின்றனர்.
  • இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்னிக்கை 11.55 லட்சத்தை தாண்டியுள்ளது.
Work from Home நியமங்கள்: IT மற்றும் BPO பணியாளர்களுக்கு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு!!  title=

IT மற்றும் BPO நிறுவனங்களுக்கு வீட்டிலிருந்து அலுவலகப் பணிகளைச் செய்யும் Work from Home வசதிக்கான இணைப்பு விதிமுறைகளை டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளதாக அரசாங்கம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. Work from Home செய்வதற்கான கால அளவு ஜூலை 31 அன்று முடிவடையவிருந்த நிலையில், அரசு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

"COVID-19-ன் (Covid-19) தற்போதைய நிலை காரணமாக, வீட்டிலிருந்து வேலை செய்ய வசதியாக 2020 டிசம்பர் 31 ஆம் தேதி வரை பிற சேவை வழங்குநர்களுக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் அளிக்கப்பட்ட தளர்வுகளை DoT மேலும் நீட்டித்துள்ளது" என்று தொலைத் தொடர்புத் துறை இரவு வெளியிட்ட ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி IT துறையில், மொத்த பணியாளர்களில் சுமார் 85 சதவிகிதம் பேர் வீட்டிலிருந்தே பணிபுரிந்து வருகின்றனர். மேலும் முக்கியமான செயல்பாடுகளைச் செய்பவர்கள் மட்டுமே அலுவலகங்களுக்குச் செல்கின்றனர்.

ALSO READ: Corona News: நல்ல செய்தி!! இறப்பு விகிதம் குறைந்தது - மத்திய சுகாதாரத் துறை

மார்ச் மாதம், கொரோனா தொற்று காரணமாக, வீட்டிலிருந்து பணி புரிவதை ஏதுவாக்க, OSP களுக்கான சில விதிமுறைகளை DoT தளர்த்தியது. வீட்டிலிருந்து பணி புரிவதற்கான கால அளவு ஜூலை 31 வரை அப்போது நீட்டிக்கப்பட்டது. தற்போது நிலைமை இன்னும் சீராகாத நிலையில், தொற்று பரவாமல் தடுக்க வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதிக்கான கால அளவை DoT மேலும் டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்னிக்கை 11.55 லட்சத்தை தாண்டியுள்ளது. செவ்வாய்க்கிழமை வரை 28,084 பேர் உயிர் இழந்துள்ளனர்.

ALSO READ: தில்லியில் 24% மக்களுக்கு கொரோனா பாதிப்பு.. மத்திய அரசு அதிர்ச்சித் தகவல்..!!!

Trending News