உலக அளவில் 4.58 கோடி பேர் நவீன அடிமைகளாகவும், அதில் இந்தியா 1.85 கோடி பேருடன் முதலிடத்தில் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது.
பாலியல் தொழில் மற்றும் பிச்சை எடுத்தல், கொத்தடிமைத் தொழிலாளர்களே நவீன அடிமைகள் எனக் குறிப்பிடப்படுகின்றனர்.
வாக் ப்ரீ பவுண்டேஷன் என்ற ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு நவீன அடிமைகள் குறித்து "குலோபல் ஸ்லேவரி இண்டெக்ஸ்" என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் மொத்தம் 4.58 கோடி பேர் நவீன அடிமைகளாக உள்ளனர். ஆனால் கடந்த 2014-ம் ஆண்டில் இது 3.58 கோடியாக இருந்தது.
1.85 கோடியுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடந்த 2014-ல் இது 1.43 கோடியாக இருந்தது.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனாவில் 33.9 லட்சம் பேர், பாகிஸ்தானில் 21.3 லட்சம் பேர் என அடுத்தடுத்து இடங்களைப் பிடித்துள்ளன.
நாட்டின் மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது வடகொரியா முதலிடத்தில் உள்ளது.
அடிமைத்தனத்தை ஒழிக்க இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து வாக் ப்ரீ பவுண்டேஷன் தலைவர் ஆண்ட்ரூ பாரஸ்ட் கூறும்போது:- அடிமைத்தனத்தை ஒழிக்க வகை செய்யும் சட்டத்தை இயற்ற உலக நாடுகள் முன்வர வேண்டும். நவீன அடிமை
சட்டம் கடுமையான சட்டமாக இயற்ற வேண்டும் என்று கூறினார்.