ஷாஹீன் பாக் மக்கள் உங்கள் வீட்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வார்கள் என பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா சர்ச்சையாக பேசியுள்ளார்!
டெல்லி: 70 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்திற்கு வரும் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், களத்தில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது. டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மியின் சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க-ன் வேட்பாளராக இளைஞர் அணி தலைவர் சுனில் யாதவ், காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணவர் அமைப்பின் டெல்லி தலைவரான ரொமேஷ் சபர்வால் ஆகியோர் போட்டியிடுவதால், அங்கு தலைவர்களின் பிரச்சாரம் களைகட்ட துவங்கியுள்ளது.
இந்த சூல்நிலையில், ஷாஹீன் பாக் மக்கள் உங்கள் வீட்டு பெண்களை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்வார்கள் என பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டில்லியின் ஷாஹீன் பாக் பகுதியில், குடியுரிமைச் சட்டத்தை (CAA) எதிர்த்து ஏராளமான மக்கள், ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அம்மாநில ஆளும்கட்சியான ஆம் ஆத்மி ஆதரவளிப்பதாகவும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டக்காரர்களை தூண்டிவிடுவதாகவும் பாஜ.க குற்றம்சாட்டி வருகிறது.
#WATCH: BJP MP Parvesh Verma says, "...Lakhs of people gather there (Shaheen Bagh). People of Delhi will have to think & take a decision. They'll enter your houses, rape your sisters&daughters, kill them. There's time today, Modi ji & Amit Shah won't come to save you tomorrow..." pic.twitter.com/1G801z5ZbM
— ANI (@ANI) January 28, 2020
இது குறித்து பாஜ.க எம்பி பர்வேஷ் சர்மா ANI செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்., டில்லியில் நடக்க இருப்பது சிறிய தேர்தல் அல்ல; நாட்டின் நிலையான மற்றும் ஒற்றுமைக்கான தேர்தல். பிப்ரவரி11 ஆம் தேதி பாஜ.க ஆட்சி அமைந்தால், CAA-க்கு எதிராக ஷாஹீன் பாக்கில் கூடியுள்ள மக்கள் ஒரு மணிநேரத்தில் அகற்றப்படுவார்கள். டில்லி மக்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் வீடுகளுக்குள் புகுந்து உங்கள் சகோதரிகள் மற்றும் குழந்தைகளை கற்பழித்து கொன்றுவிடுவார்கள். அப்போது உங்களை காப்பாற்ற பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ வரமாட்டார்கள்" என அவர் தெரிவித்துள்ளார்.