வெளிநாட்டில் உள்ள கணவன் உயிரிழந்ததாக கூறி இன்ஷூரன்ஸ் பணம் ரூ.25 லட்சம் ஆட்டைய போட்ட மனைவி!

ஆயுள் காப்பீட்டு பணத்திற்காக வெளிநாட்டில் உள்ள கணவன் உயிரிழந்ததாக கூறி ரூ.25 லட்சம் பணத்தை மனைவி மோசடி செய்த சம்பவம் மேற்கு வங்கத்தில் அரங்கேறியுள்ளது. 

Written by - Arunachalam Parthiban | Last Updated : Jun 28, 2022, 02:36 PM IST
  • சவுதி அரேபியாவில் வேலை செய்து வரும் கணவன்
  • உயிரிழந்துவிட்டதாக போலி சான்றிதழ் பெற்ற மனைவி
  • ஆயுள் காப்பீட்டு பணம் ரூ.25 லட்சத்தை எடுத்து மோசடி
வெளிநாட்டில் உள்ள கணவன் உயிரிழந்ததாக கூறி இன்ஷூரன்ஸ் பணம் ரூ.25 லட்சம் ஆட்டைய போட்ட மனைவி! title=

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியை சேர்ந்தவர் நுர்ஜமால் ஷேக். இவர் மனைவி ஷஹினா கதும். கடந்த 5 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் நுர்ஜமால் ஷேக் பணியாற்றி வருகிறார். 

கணவன் வெளிநாடு சென்ற பிறகு அவருடன் பேசுவதை படிப்படியாக குறைத்த மனைவி ஷஹினா ஒரு கட்டத்தில் கணவருடனான தொடர்பை முற்றிலும் துண்டித்துக்கொண்டார். மேலும், கணவரால் உடனடியாக இந்தியா வர முடியாது என்பதை தெரிந்துகொண்ட அவர் நுர்ஜமால் பெயரில் உள்ள ஆயுள் காப்பீட்டு பணம் மற்றும் வங்கி சேமிப்பில் உள்ள பணத்தை அபேஸ் செய்ய திட்டம் தீட்டினார். 

இதற்காக உயிருடன் இருக்கும் கணவன் மரணித்துவிட்டதாக கூறி போலி சான்றிதழ் தயாரித்துள்ளார். இதை வைத்து வங்கியில் உள்ள பணம் மற்றும் ஆயுள் காப்பீட்டு பணம் என ரூ.25 லட்சத்தை பெற்று மோசடி செய்துள்ளார். 

மேலும் படிக்க | Fresh G7 Sanctions: ரஷ்யாவின் பாதுகாப்புத் துறைக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்கா

இதனிடையே 5 ஆண்டுகள் கழித்து சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா வந்த நுர்ஜமால் வங்கிக்கு சென்று தனது கணக்கில் இருந்த பணத்தை எடுக்க முயன்றுள்ளார். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக போலி சான்றிதழ் அளித்து மனைவி பணத்தை எடுத்துக்கொண்ட சம்பவத்தை மேலாளர் கூறியதை அறிந்து நுர்ஜமால் ஷேக் அதிர்ச்சிக்குள்ளானார். 

உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று மனைவி மீது நுர்ஜமால் புகார் அளித்தார். அதில், தனது மனைவிக்கும் வேறொரு நபருக்கும் தொடர்பு இருப்பதாகவும் தனது பணத்தை எல்லாம் சுருட்டிக்கொண்டு தலைமறைவான அவரை கண்டுபிடித்து  நீதி வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் வேலை செய்துவந்த கணவன் உயிரிழந்துவிட்டதாக கூறி ரூ.25 லட்சம் பணத்தை அபேஸ் செய்த மனைவியின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | ’ஹனிமூன் to ஹனுமன் ஹோட்டல்’ டிவிட்டர் பதிவுக்காக முகமது ஜூபைர் கைது - பின்னணி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News