புது டெல்லி: பல மாநிலங்களில் ஆட்சி அதிகார இழப்பு மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான எம்.எல்.ஏக்கள் கொண்டுள்ளதால் காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவையில் இடங்கள் குறைந்துவிட்டன. இதன் விளைவாக, காங்கிரஸ் கட்சி தனது பழைய மற்றும் மூத்த தலைவர்களை மீண்டும் மாநிலங்களவைக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், மூன்று ராஜ்யசபா இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரசுக்கு ஒரு மாநிலங்களவை (Rajya Sabha seat) இடத்தை திமுக வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து யாரை மாநிலங்களவைக்கு அனுப்புவது என்ற விவாதம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபாவுக்கு செல்வது யார்?
மூன்று ராஜ்யசபா இடங்களுக்கான இடைத்தேர்தல் (Rajya Sabha Election 2021) விரைவில் நடைபெறும் என்றும், அதற்கான தேதியை இந்தியா தேர்தல் ஆணையம் ஓரிரு நாட்களில் அறிவிக்கும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மூன்று இடங்களிலும் இரண்டு இடங்கள் திமுக போட்டியிடும். திமுக சார்பில் மாநிலங்களவைக்கு யாரை அனுப்புவது என்று தமிழகத்தின் புதிய முதல்வர் மற்றும் திமுக தலைவரான மு.க. ஸ்டாலின் (M K Stalin) இறுதி முடிவு செய்வார். மற்றொரு இடத்தை தனது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு வழங்கியுள்ளது. காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைக்கு செல்லப்போகுவது யார் என்பதை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியால் (Sonia Gandhi) இறுதி செய்யப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ALSO READ | தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் விரைவில் அறிவிப்பு
காங்கிரசுக்கு இரண்டு இடங்கள்:
சமீபத்தில், காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சதவ் மரணமடைந்ததை அடுத்து, மகாராஷ்டிராவில் இருந்து ஒரு ராஜ்யசபா இடமும் காலியாகிவிட்டது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்த்து, கட்சிக்கு இரண்டு இடம் இருப்பதால், இரண்டு பேரை மாநிலங்களவைக்கு அனுப்ப முடியும். அதில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத்தை (Ghulam Nabi Azad) காங்கிரஸ் கட்சி சார்பில் அனுப்பலாம் எனத்தகவல். அதே நேரத்தில், மற்றொருவர் யார் என்பதும் கட்சி ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
யாரை அனுப்புவது - காங்கிரஸ் ஆலோசனை:
அதே நேரத்தில் மகாராஷ்டிராவில் (Maharashtra Rajya Sabha) காலியாக உள்ள ஒரு இடத்திற்கு முகுல் வாஸ்னிக், ராஜீவ் சுக்லா, ரஜ்னி பாட்டீல் ஆகிய மூன்று பேரின் பெயர்கள் ஆலோசனை செய்யப்படுவதாகவும், மற்றொரு இடத்திற்கு குலாம் நபி ஆசாத் மற்றும் முகுல் வாஸ்னிக் இருவர் பெயர் பரிசீலிப்பதாகத் தெரிகிறது.
ALSO READ | ‘மாநிலங்களவையில் இன்று நடந்தது துரதிர்ஷ்டவசமானது, வெட்கக்கேடானது’ – Rajnath Singh
அடுத்த ஆண்டு பல மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற உள்ளது. அதேநேரத்தில் சமீபத்தில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த கருத்து வேறுபாடு முன்னுக்கு வந்தது. இதை மனதில் வைத்து, மாநிலங்களவைக்கு செல்ல வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR