பாஜகவில் இணைந்த ஜோதிரதித்யா சிந்தியாவும் ராகுல் காந்தியும் பள்ளித் தோழர்கள்

தற்போது நடைபெறுவது சித்தாந்தத்தின் சண்டை. அதில் எந்தவித மாற்றமும் இல்லை. ஒருபுறம் காங்கிரசும், மறுபுறம் பாஜக-ஆர்எஸ்எஸ். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 12, 2020, 06:39 PM IST
பாஜகவில் இணைந்த ஜோதிரதித்யா சிந்தியாவும் ராகுல் காந்தியும் பள்ளித் தோழர்கள் title=

புதுடெல்லி: தனது நெருங்கிய உதவியாளர் மற்றும் நண்பன் ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக-வில் இணைந்ததை குறித்து பேசிய ராகுல் காந்தி, தனது அரசியல் எதிர்காலம் குறித்து கவலைப்படுவதால் தான் "தனது சித்தாந்தத்தை கைவிட்டேன்" என்றார். மேலும் "ஜோதிராதித்யா சிந்தியா என்ன சொல்கிறார் என்பதற்கும், அவரது இதயத்தில் உள்ளதற்கும் வித்தியாசம் உள்ளது" என்று முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் செய்தியாளர்களிடம் கூறினார். 

தற்போது நடைபெறுவது சித்தாந்தத்தின் சண்டை. அதில் எந்தவித மாற்றமும் இல்லை. ஒருபுறம் காங்கிரசும், மறுபுறம் பாஜக-ஆர்எஸ்எஸ். 

ஜோதிராதித்யா சிந்தியாவின் சித்தாந்தத்தை நான் அறிவேன், அவர் என்னுடன் கல்லூரியில் படித்தார். எனக்கு அவரை நன்றாகத் தெரியும். அவர் தனது எதிர்கால அரசியல் பற்றி கவலைப்பட்ட அவர், தனது சித்தாந்தத்தை தனது சட்டைப் பையில் வைத்துகொண்டு ஆர்.எஸ்.எஸ் உடன் சென்றார்" என்று ராகுல் காந்தி கூறினார்.

"உண்மை என்னவென்றால், அவருக்கு அங்கு மரியாதை கிடைக்காது. அவரது இதயத்தில் உள்ள உணர்ச்சியும் திருப்தி பெறாது. ஜோதிராதித்யாவுடன் எனக்கு பழைய நட்பு உள்ளது" என்றார்.

Trending News