NRC பட்டியலுக்கு எதிராக கண்டன பேரணி -மம்தா பானர்ஜி!

குடிமக்களின் தேசிய பதிவேட்டின் (NRC) இறுதி பட்டியலுக்குப் பிறகு, இந்திய அரசியலில் கொந்தளிப்பு நிலைமை ஏற்பட்டுள்ளது!

Last Updated : Sep 2, 2019, 09:07 PM IST
NRC பட்டியலுக்கு எதிராக கண்டன பேரணி -மம்தா பானர்ஜி! title=

குடிமக்களின் தேசிய பதிவேட்டின் (NRC) இறுதி பட்டியலுக்குப் பிறகு, இந்திய அரசியலில் கொந்தளிப்பு நிலைமை ஏற்பட்டுள்ளது!

இந்த பட்டியலில் சுமார் 19 லட்சம் பேர் பெயரிடப்படவில்லை என கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், மக்கள் என்ன செய்வது என்ற அச்சத்தில் உள்ளனுர். இதற்கிடையில், குடிமக்களின் தேசிய பதிவேட்டின் பட்டியல் தொடர்பாக அரசியல் தொடங்கியுள்ளது.

அந்த வகையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி NRC பட்டியலுக்கு எதிரான போராட்டத்தை அறிவித்துள்ளார். வரும் செப்டம்பர் 12 அன்று கொல்கத்தாவில் கண்டன பேரணி நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார்.

அசாமில் உள்ள தேசிய சிவில் பதிவேட்டில் (NRC) சுமார் 19 லட்சம் பேரை விலக்குவது குறித்து மம்தா பானர்ஜி கடுமையாக பதிலளித்திருந்தார். NRC-யின் தோல்வி குறித்து முன்னர் எனக்குத் தெரியாது என்று தெரிவித்த அவர், தகவல்கள் வெளிவருவதால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கூர்க்கா மக்கள் இந்த பட்டியலில் இருந்து விலக்கப்பட்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுகிறோம். CRPF மற்றும் பிற ஜவான்கள் உட்பட ஆயிரக்கணக்கான உண்மையான இந்தியர்களின் பெயர்கள் NRC-யிலிருந்து விலக்கப்பட்டுள்ளன எனவும் கடுமையாக சாடியுள்ளார்.

NRC-யின் இறுதி பட்டியலில் இருந்து வெளியேறியவர்களில் முன்னாள் ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமதுவின் குடும்ப உறுப்பினர்களும் அடங்குவதாக மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார். உண்மையான இந்தியர்களாக இருப்பவர்கள் NRC-யிலிருந்து விலக்கப்படக்கூடாது என்பதில் அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும் என்று மம்தா தெரிவித்துள்ளார். நமது உண்மையான இந்திய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending News