அதிகரிக்கும் கோவிட் எண்ணிக்கை, வார இறுதி ஊரடங்குடன் புதிய விதிமுறைகள் அறிவிப்பு

சமீப வாரங்களில் டெல்லியில் தொற்றின் எண்ணிக்கையும், தொற்றும் பரவும் வேகமும் மிக அதிகமாக இருந்து வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 4, 2022, 02:00 PM IST
  • டெல்லி உட்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.
  • டெல்லியில் மீண்டும் வார இறுதி ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • 50% ஊழியர்களே தனியார் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகரிக்கும் கோவிட் எண்ணிக்கை, வார இறுதி ஊரடங்குடன் புதிய விதிமுறைகள் அறிவிப்பு title=

புதுடெல்லி: டெல்லி உட்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், டெல்லியில் நோய்த்தொற்றின் வேகத்தை தடுக்க முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வேகமாக அதிகரித்து வரும் தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு மத்தியில் கூட்டப்பட்ட டிடிஎம்ஏ கூட்டம் முடிவடைந்தது. இன்றைய சந்திப்பிற்குப் பிறகு, டெல்லியில் மீண்டும் வார இறுதி ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சமீப வாரங்களில் டெல்லியில் (Delhi) தொற்றின் எண்ணிக்கையும், தொற்றும் பரவும் வேகமும் மிக அதிகமாக இருந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கொரோனா தொற்றின் புதிய மாறுபாடான ஓமிக்ரானின் எண்ணிக்கையும் டெல்லியில் அச்சுறுத்தும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில், இன்று கூட்டப்பட்ட டிடிஎம்ஏ கூட்டதில் பல புதிய கட்டுப்பாடுகள் மற்றும் நெறிமுறைகள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளன.  

அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்களுக்கே அனுமதி

50% ஊழியர்களே தனியார் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், டெல்லியில் அத்தியாவசிய சேவைகள் தொடரும். இந்த கூட்டத்தின் வழிகாட்டுதல்கள் குறித்து அதிகாரப்பூர்வ உத்தரவு மற்றும் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இந்த உத்தரவுக்கு முன்னதாகவே, டெல்லி மெட்ரோ மற்றும் டிடிசியின் பேருந்துகள் குறைந்த அளவு பயணிகளுடன் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று

துணை முதல்வர் அறிக்கை

டெல்லியில் கொரோனாவின் (Coronavirus) கவலைக்கிடமான சூழ்நிலையில், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செய்தியாளர் சந்திப்பை நடத்தி முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். டெல்லி உட்பட நாடு முழுவதும் ஓமிக்ரானின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சிசோடியா கூறினார். ஓமிக்ரான் அதிக தீங்கு விளைவிக்காது என்றாலும், இது குறித்த கவனம் தேவை என்றார் அவர். ஓமிக்ரான் பாதிக்கப்பட்டு, டெல்லி மருத்துவமனைகளில் 350 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 124 பேர் ஆக்ஸிஜன் ஆதரவில் உள்ளனர். 7 பேர் வென்டிலேட்டரில் உள்ளனர்.

எய்ம்ஸ்ஸில் விடுமுறை ரத்து செய்யப்பட்டது

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, டெல்லி எய்ம்ஸ் அதன் குளிர்கால விடுமுறைகளின் மீதமுள்ள விடுமுறை நாட்களை ரத்து செய்துள்ளது. விடுப்பில் உள்ள ஊழியர்களை விரைவில் பணிக்கு திரும்புமாறு எய்ம்ஸ் கேட்டுக் கொண்டுள்ளது. 

ALSO READ | Covishield-Covaxin காக்டெய்லின் அற்புதமான ரிசல்ட்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News