மும்பை: மகாராஷ்டிரா ஏக்நாத் ஷிண்டே: மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது. மகாராஷ்டிராவில் ஆளும் கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள எம்எல்ஏக்களுக்கு தலைமை வகிக்கும் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக மிகக் குறைவான எம்எல்ஏக்கள் உள்ளனர். எங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. நாங்கள் யாருக்கும் பயப்படப் போவதில்லை உத்தவ் தாக்கரேவுக்கு பெரும்பான்மை இல்லை. ஜனநாயகத்தில் பெரும்பான்மை என்பது மிக முக்கியமானது என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு
40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் எங்களுடன் இருப்பதாக ஏக்நாத் ஷிண்டே கூறிவருகிறார். அதே நேரத்தில் மும்பையில் முதல்வர் உத்தவ் தாக்கரே அரசு மற்றும் சிவசேனா கட்சியை காப்பாற்ற தொடர்ந்து முயற்சித்து வருகிறார். தற்போது மகாவிகாஷ் அகாடி கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் ஆலோசனை செய்து வருகிறது.
அதிருப்தி எம்எல்ஏக்கள் பட்டியல் நீள்கிறது
அசாம் மாநிலம் கவுகாத்தியில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் பட்டியலில் திலீப் லாண்டேவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து கவுகாத்தி வந்தடைந்தார். அதே நேரத்தில், சிவசேனாவின் 60க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் ஒன்று சேர தயாராக இருப்பதாக ஷிண்டே முகாம் கூறி வருகிறது.
மேலும் படிக்க: அதிகாரப் போட்டி! அரசியல் குழப்பம்! மகாராஷ்டிராவில் ஜனநாயகம் கேள்விகுறி
மும்பையில் ஏக்நாத் ஷிண்டே
இதற்கிடையில், சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே கவுகாத்தியில் இருந்து மும்பை புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் துணை சபாநாயகரை அவர் சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குழுவுடன் கவுகாத்தியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவுடன் மீண்டும் கூட்டணி ஆட்சி
உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது உதவியாளர்கள், காங்கிரஸ் மற்றும் என்சிபி உடனான கூட்டணியை சிவசேனா முடித்துக் கொண்டு, பழைய கூட்டணியான பாஜகவுடன் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தேசியவாத காங்கிரஸ் துணை நிற்கும்
மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், தேசியவாத காங்கிரஸ் முழு ஒத்துழைப்பை வழங்கும் என்று துணை முதல்வரான அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
இப்போது நேரம் கடந்துவிட்டது -சஞ்சய் ராவத்
அதே சமயம், நாங்கள் விட்டுக் கொடுப்பவர்கள் அல்ல என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திரும்பி வந்து பேச்சுவாரத்தையில் ஈடுபட நாங்கள் வாய்ப்பு கொடுத்தோம், ஆனால் இப்போது நேரம் கடந்துவிட்டது என எச்சரிக்கும் தொனியில் பேசியுள்ளார்.
மேலும் படிக்க: என்ன நடந்தாலும்.. உத்தவ் தாக்கரேவுக்கு முழு ஆதரவு உள்ளது: என்சிபி தலைவர் அஜித் பவார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR