டெல்லியில் டிராக்டர் பேரணியை நடத்திய போராட்ட விவசாயிகள் கலவரத்தில் ஈடுபட்டத்தை அடுத்து ஏற்பட்ட மோதலில் 300 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்தனர். செங்கோட்டையில், கலவரக்காரர்கள், செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியை ஏற்றி கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல்களில் காயமடைந்த சில காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தங்கள் நிலையை விவரித்துள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்த வஜிராபாத் எஸ்.எச்.ஓ பி.சி யாதவ் கூறுகையில், "நாங்கள் செங்கோட்டையில் பாதுகாவல் பணியில் இருந்த போது, கலவரக்காரர்கள் நிழைந்தனர். ஆக்ரோஷமாக இருந்த அவர்களை கட்டுபடுத்த முயற்சித்தோம். விவசாயிகளுக்கு எதிராக நாங்கள் எங்கல் சக்தியை பயன்படுத்த நாங்கள் விரும்பவில்லை, எனவே முடிந்தவரை கட்டுப்பாடுடன் நடந்து கொண்டோம் எனக் கூறினார்.
#WATCH | We were deployed at Red Fort when many people entered there. We tried to remove them from the rampart of the fort but they became aggressive....We didn't want to use force against farmers so we exercised as much restraint as possible: PC Yadav, SHO Wazirabad. #Delhi pic.twitter.com/v6o7D57EAk
— ANI (@ANI) January 27, 2021
அதே நேரத்தில், வடக்கு டெல்லியின் டி.சி.பி.யின் ஆபரேட்டர் சந்தீப் கூறுகையில், "கலவரக்காரர்கள் பலர் திடீரென செங்கோட்டையை அடைந்தனர். குடிபோதையில் இருந்த அவர்கள் வாள், லத்தி மற்றும் பிற ஆயுதங்களால் எங்களைத் தாக்கினர். நிலைமை மோசமடைந்தது, வன்முறைக் கும்பலைக் கட்டுப்படுத்துவது எங்களுக்கு மிகவும் சவாலானதாக இருந்தது” என்றார்.
Many violent people reached Red Fort suddenly. Drunken farmers or whoever they were, attacked us suddenly with swords, lathis, and other weapons. The situation was worsening and it was too difficult for us to control the violent crowd: Sandeep, Operator of DCP North, Delhi pic.twitter.com/UKVkcKi0QI
— ANI (@ANI) January 27, 2021
விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த வன்முறை தொடர்பாக டெல்லி காவல்துறை இதுவரை 22 முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ளது. இந்த வன்முறையில் 300 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்தனர்.
மூன்று புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி செவ்வாயன்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் நாட்டின் தேசிய தலைநகரில் செவ்வாய்க்கிழமை பல இடங்களில் டிராக்டர் பேரணியை நடத்தினர். போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 300 க்கும் மேற்பட்ட காவல் துறை பணியார்கள் காயமடைந்தனர்.
ALSO READ | பேரணிக்கு லத்தியுடன் வாருங்கள்...வைரலாகும் விவசாயிகள் தலைவர் வீடியோ
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR