வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய் ஒன்று குரைத்ததால், அதனை சகித்துக் கொள்ள முடியாமல், அண்டை வீட்டாரை இரும்பு கம்பியால் தாக்கியதில், நாயும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படு காயமடைந்தனர். தில்லியின் பஷ்சிம் விஹார் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை இந்தச் சம்பவம் நடந்ததாக போலீஸார் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
காவல் துணை ஆணையர் சமீர் சர்மா இது குறித்து கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை காலை தகராறு தொடர்பான தகவல் காவல் நிலையத்திற்கு வந்தது. விசாரணையின் போது தரம்வீர் தஹியா என்பவர் காலையில் வாக்கிங் போனது தெரியவந்தது. அப்போது ஏ பிளாக் பஸ்சிம் விஹாரில் வசிப்பவருக்கு சொந்தமான செல்ல நாய் ஒன்று குரைக்க ஆரம்பித்தது. அப்போது, தஹியா நாயை வாலை பிடித்து தூக்கி எறிந்தார் என்று டிசிபி கூறினார்.
நாயின் உரிமையாளர் ரக்ஷித் (25) இதைப் பார்த்ததும், வாக்குவாதம் ஏற்பட்டது. அவருக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே சிறு கைகலப்புக்கு வழிவகுத்தது. அப்போது நாய் தஹியாவையும் கடித்தது.
சிறிது நேரம் கழித்து தஹியா இரும்புக் குழாயுடன் அந்த இடத்திற்கு வந்து, குற்றம் சாட்டப்பட்ட நபர் நாயின் தலையில் கொடூரமாக தாக்கியதாக டிசிபி தெரிவித்தார். நாய் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் முழுவதுமாக பாதிக்கப்பட்டவரின் வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளில், பின்னர் 53 வயதான ஹேமந்த் என அடையாளம் காணப்பட்ட ஒரு முதியவர் நாயைக் காப்பாற்ற முயன்றார், இருப்பினும், தஹியா அவரைவும் இரும்பு கம்பியால் தாக்கினார்.
வீடியோவில், தலையில் பலத்த அடிபட்ட நாய் சிறிது நேரம் மயங்கிக் கிடப்பதைக் காணலாம். ஒரு நிமிடத்திற்கு பின் விழித்துக்கொண்டாலும் வலியால் துடித்தபடி அங்கும் இங்கும் ஓடுவதைக் காண முடிந்தது.
சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை இங்கே காணலாம்:
இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் அவர் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குழாயை திரும்ப பெற நாயின் உரிமையாளர் ரக்ஷித்தின் வீட்டிற்குள் நுழைந்தார். அப்போது அவர், 45 வயதான ரேணு என்ற யசோதா என்ற பெண்ணைத் தாக்கினார் என்று டிசிபி சர்மா செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ்ஸிடம் தெரிவித்தார்.
வழக்கு பதிவு
அதன்படி, போலீசார் விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 11, பிரிவு 308 (குற்றமில்லா கொலை முயற்சி), 323 (தானாக முன்வந்து காயப்படுத்தியதற்கான தண்டனை), 341 (தவறான முறையில் தாக்குதல்) மற்றும் 451 (வீட்டிற்குள் நுழைந்து அத்துமீறுதல்) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்தனர்.
காயமடைந்த அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம், 1960 என்பது இந்தியாவில் விலங்குகள் நலன் தொடர்பான மிக விரிவான சட்டங்களில் ஒன்றாகும். 2020 ஆம் ஆண்டின் விலங்குகள் பாதுகாப்புக் குறியீட்டின் படி, உலகில் சிறப்பாக செயல்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
மேலும் படிக்க | நாகப்பாம்பை உயிருடன் விழுங்கும் ராட்சஸ பாம்பு; மனதை உலுக்கும் வைரல் வீடியோ..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR