கடந்த சில வாரங்களாக இந்திய அரசாங்கத்துக்கும் ட்விட்டர் நிறுவனத்துக்கும் இடையில் பலவித வாக்குவாதங்களும் விவாதங்களும் நடந்து வருகின்றன. இந்திய அரசின் சட்டதிட்டங்களுக்கு பல சமூக ஊடகத் தளங்கள் தங்கள் ஒப்புதலை அளித்துள்ள நிலையில், ட்விட்டர் நிறுவனம் மட்டும் தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது.
முன்னாள் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் (Ravi Shankar Prasad) வெளியேறியுள்ள நிலையில், இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப அமைச்சராக அஸ்வினி வைஷ்ணவ் பதவி ஏற்றுள்ளார்.
பதவி ஏற்றவுடனேயே, அவர், வியாழக்கிழமை (ஜூலை 8) அன்று, தற்போது இந்திய அரசாங்கத்துக்கும் ட்விட்டர் நிறுவனத்துக்கும் இடையிலான சச்சரவில் தன்னுடைய நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பதவியேற்ற அஸ்வினி வைஷ்ணவ், புதிய விதிமுறைகளை (New IT Rules) அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் இந்தியாவின் சட்டங்களுக்குதான் அதிகபட்ச முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்தியாவில் வசித்து, பணிபுரியும் அனைவரும் இங்குள்ள சட்டங்களை மதித்து நடக்க வெண்டும் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மோடி அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சராக்கப்பட்ட பின்னர் கட்சி தலைமையகத்திற்கான தனது முதல் பயணத்தின் போது வைஷ்னவ் "நாட்டின் சட்டத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும்" என்று கூறினார். புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டத்திற்கு ட்விட்டர் இணங்காதது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு அனைவரும் புதிய வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் " நாட்டின் சட்டம் அனைத்தையும் விட உயர்ந்தது" என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவில் வசிக்கும் மற்றும் வேலை செய்பவர்கள் அனைவரும் நாட்டின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்று புதிதாக பதவியேற்ற அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
ALSO READ: டிவிட்டர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது...
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ட்விட்டர் (Twitter) இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை பின்பற்ற மறுப்பதன் காரணமாக பல வாரங்களாக இந்த விவகாரம் உச்சத்தில் உள்ளது. இதில் பலவித நிபந்தனைகள் மற்றும் விதிகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதிகளின் படி, அனைத்து நிறுவனங்களும் மூன்று முக்கிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்பது ஒரு முக்கிய குறிப்பாக உள்ளது. தலைமை இணக்க அதிகாரி, நோடல் அதிகாரி மற்றும் குறை தீர்க்கும் அதிகாரி ஆகிய பதவிகளில் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். 50 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட சமூக ஊடக தளங்கள் கண்டிப்பாக இந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும், இவர்கள் அனைவரும் இந்தியாவில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதிகள் மே 26 முதல் நடைமுறைக்கு வந்தாலும், மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர் இந்த வழிகாட்டுதல்களை இன்னும் பின்பற்றவில்லை.
இருப்பினும், இன்று காலை, தாங்கள் இந்தியாவுக்கு ஒரு இடைக்கால தலைமை இணக்க அதிகாரியை நியமித்துள்ளதாகவும், விரைவில் மற்ற முக்கிய நியமனங்கள் செய்யப்படும் என்றும் ட்விட்டர் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது. புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்க இந்தியாவில் ஒரு குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்க எட்டு வார கால அவகாசம் தேவை என்றும் ட்விட்டர் மேலும் கூறியுள்ளது.
ALSO READ: Twitter-க்கு போட்டியாக GETTR; டொனால்ட் டிரம்ப் குழுவின் புது சமூக ஊடக தளம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR