எச்சரிக்கை! முகமூடி அணியாமல் இருந்தால் ரூ. 1 லட்சம் அபராதம்; 2 ஆண்டுகள் சிறை தண்டனை

ஒரு மனிதன் கோவிட் -19 விதிகளை மீறியதாகக் கண்டறியப்பட்டால், அவருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 24, 2020, 08:21 AM IST
எச்சரிக்கை! முகமூடி அணியாமல் இருந்தால் ரூ. 1 லட்சம் அபராதம்; 2 ஆண்டுகள் சிறை தண்டனை title=

ராஞ்சி: கொரோனா வைரஸ்  (Coronavirus infection)தொற்றுநோயைத் தவிர்ப்பதற்கு, முகத்தை ஒரு துணி அல்லது முகமூடியால் மூடுவது, சமூக தூரத்தை உருவாக்குவது, பொது இடங்களில் துப்பாமல் இருப்பது போன்ற பல சட்டங்கள் உள்ளன. இந்தச் சட்டங்களுக்குக் கீழ்ப்படியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதற்கான விதிகள் உள்ளது. ஒவ்வொரு மாநிலங்களில் அபராதம் விதிக்க தனித்தனி விதிகள் உள்ளன. அதாவது முகமூடி அணியாததற்கு 500 ரூபாய் அபராதம் (fine for not wearing mask) மற்றும் சில மாநிலங்களில் 1,000 ரூபாய் வரை அபராதம் உள்ளது.

ஆனால் ஜார்க்கண்ட் அரசு (Jharkhand Government), அபராதம் விவகாரத்தில் அனைத்து மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளி உள்ளது. கோவிட் -19 விதிகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான சட்டங்களை உருவாக்கியுள்ளது. இங்கே ஒரு மனிதன் விதிகளை மீறியதாகக் கண்டறியப்பட்டால், அவருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

இந்த தொற்று நோய் சட்டத்துக்கு ஜார்க்கண்ட் அமைச்சரவை (Jharkhand Cabinet) நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த சட்டத்தில், கோவிட் -19 இன் தடை நடவடிக்கைகளை மீறுபவர்களுக்கு எதிராக ரூ .1 லட்சம் வரை அபராதமும், 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

COVID-19 தொற்று நோயின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் முக்கியமாக  முகமூடிகளை அணிவது, சமூக தூரத்தை கடைபிடித்தல், பொது இடங்களில் துப்பக்கூடாது.

 

ALSO READ | தட்டுப்பாட்டில் முக கவாசம்.... எளிமையான முறையை கண்டுபிடித்த பிரபலம்!

டெல்லிக்கு ரூ .500 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறை:
முகமூடி அணியாமல் இருப்பது, பொது இடங்களில் எச்சில் துப்புவது போன்ற சம்பவங்களுக்கு எதிராக ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த சட்டவிதிகள் உள்ளன. தேசிய தலைநகரத்தை பற்றி பேசினால், முகமூடிகளைப் பயன்படுத்தாததற்காக 500 முதல் 1000 ரூபாய் அபராதமும் 6 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகிறது.

கொரோனா காலத்தில் இந்த சட்டங்களை மாநில அரசுகள் கண்டிப்பாக பின்பற்றுகின்றன. டெல்லியில் உள்ள காவல்துறையினரும் இதுவரை முகமூடி (Face Mask) இல்லாமல் சுமார் 48,000 பேரை கைது செய்துள்ளனர். முகமூடியைப் பயன்படுத்தாததற்காக வசூலிக்கப்பட்ட அபராதத்தின் அளவு சுமார் இரண்டரை கோடியை எட்டியுள்ளது.

முகமூடி அணியாதவர்களுக்கு காவல்துறை அபராதம் விதித்து, முகமூடிகளையும் வழங்கி வருகிறது. டெல்லி காவல்துறை இதுவரை சுமார் 1.5 லட்சம் முகமூடிகளை விநியோகித்துள்ளது. அபராதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் கார் ஓட்டுநர்கள். ஏனென்றால், காரில் அமர்ந்திருக்கும் ஆண்/பெண் முகமூடிகளைப் பயன்படுத்தத் தேவையில்லை என்று நம்புகிறார்கள். ஆனால் அது தவறு. கட்டாயம் அவர்கள் முககவாசத்த்தை அணிய வேண்டும்.

ALSO READ | திருமணதின் போது மாஸ்க் அணியாத மாப்பிள்ளை; அபராதம் விதித்த நிர்வாகம்!

Trending News