குஜராத் மாநிலத்தில் 2-வது கட்ட சட்டசபை தேர்தல் இன்று நடைபெறுகிறது. 93 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு தொடங்கியது. அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குஜராத் சட்டசபைக்கான 182 தொகுதிகளில் 89 இடங்களில் கடந்த டிசம்பர் 9-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. அந்த வகையில் இன்று 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இன்று நடக்க இருக்கும் குஜராத் மாநில 2-வது கட்ட தேர்தலில் மொத்தம் 851 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் துணை முதல்வர் நிதின் பட்டேல், அமைச்சர் பூபேந்திர சுதஷ்மா, காங்கிரஸ் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானி, அல்பேஷ் தாகுர் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்.
பாஜக 93 வேட்பாளர்களையும் காங்கிரஸ் கட்சி 81, பகுஜன் சமாஜ் 75, ஆம் ஆத்மி 8, ஐக்கிய ஜனதா தளம் 14, தேசியவாத காங்கிரஸ் 28, சிவசேனா 17 வேட்பாளர்களையும் இன்று களமிறக்கியுள்ளது.
இன்றைய தேர்தலில் மொத்தம் 2,22,96,867 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, பாஜக மூத்த தலைவர் அத்வானி, தேசியத் தலைவர் அமித்ஷா ஆகியோர் இன்று வாக்களிக்க உள்ளனர்.
கடந்த டிசம்பர் 9-ம் தேதி நடைபெற்ற முதல் கட்ட வாக்குப் பதிவில் 66.75% வாக்குகள் பதிவாகி இருந்தன. 2.12 கோடி பேர் வாக்களித்தனர். மொத்தம் 977 வேட்பாளர்கள் போட்டியிருந்த்னர் என்பது குறிப்பிடத்தக்கது.
Smallest and largest constituencies by area and by electorate in phase two of #GujaratElection2017 pic.twitter.com/rh8jw2B3pf
— ANI (@ANI) December 14, 2017
Voting for second phase of #GujaratElection2017 to begin shortly. Visuals from Vadodara's Kasba.Polling booth no.12 pic.twitter.com/2D23kHCOYO
— ANI (@ANI) December 14, 2017
Voting for 93 seats in second phase of #GujaratElection2017 begins pic.twitter.com/TcF8hEtuGK
— ANI (@ANI) December 14, 2017
Hardik Patel's parents pray as voting for second phase of #GujaratElection2017 begins pic.twitter.com/YZAaAtMWL6
— ANI (@ANI) December 14, 2017