கொரோனா விழிப்புணர்வுக்காக கேரள போலீசார் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது!!
சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி தனது பழத்தை கட்டிவருகிறது. சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த வைரஸ். இதை தொடர்ந்து தற்போது இந்தியாவில் காலூன்றியுள்ள கொரோனா வைரஸ் தனது பழத்தை கட்ட துவங்கியுள்ளது. இதுவரை இந்தியாவில் 149 பேர் கொரோனா வைரஸ் தோற்றால் பாதிக்கபட்டுள்ளனர். அதில், 13 பேர் குணமடைந்துள்ளனர், மூவர் பலியாகியுள்ளனர்.
கொரோனா வைரஸ் கைகள் மூலமாக உடலில் பரவும் என்பதால் உலக சுகாதார அமைப்பு கூறுகையில் , முககவசங்கள் அணிவதை விட கைகளை கழுவுவது தான் சிறந்த தடுப்பு என கூறியுள்ளது. மேலும் வெளியில் பயணம் செய்வோர் கைகளில் தேய்த்து பயன்படுத்தக்கூடிய கிருமிநாசினி பயன்படுத்திக் கொள்ளவும் கூறியுள்ளது. இந்நிலையில், கை கழுவுவது குறித்து விழிப்புணர்வு மக்கள் மத்தியில் சேர்க்க கேரளா போலீசார் நடன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கை கழுவும் முறையை குறித்து விலகி உள்ளனர்.
முகக் கவசம் அணிவது, கைகளை கழுவும் முறைகள் போன்றவற்றை குறித்து நடனம் மூலம் கேரள போலீசார் நடனத்துடன் நடித்து காண்பித்துள்ளனர். காவல்துறையினரின் இந்த நடன விழிப்புணர்வு வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனும் இதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.