நீதிமன்றங்கள் எத்தனையோ வழக்குகளை பார்த்துள்ளன, ஆனால் ’சீதா’ என்ற பெயர் வைத்ததற்காக ஒரு வழக்கை நீதிமன்றம் எதிர்கொள்வது என்பது இதுவரை யாரும் கேட்டிராத விஷயமாக இருக்கிறது. கல்கத்தா ஜல்பைகுரி உயர் நீதிமன்றத்தின் சர்க்யூட் நீதிமன்ற அமர்வின் முன் இந்த வித்தியாசமான வழக்க்கு வந்துள்ளது.
பெண் சிங்கம் சீதா பெண் சிங்கத்திற்கு சீதா என்று பெயர் வைத்ததற்காகவா இந்த பஞ்சாயத்து என்று தோன்றலாம். விஷயம் முழுவதும் தெரிந்தால் உங்கள் கோணம் மாறலாம்.
சிலிகுரியில் உள்ள சாஃபாரி பூங்காவிற்கு கொண்டு வரப்பட்ட பெண் சிங்கம் அக்பர் என்ற சிங்கத்தை வைத்திருக்கும் இடத்திலேயே வைக்கும் வனத்துறையின் நடவடிக்கை எதிர்த்து விஸ்வ ஹிந்து விஷ்வ ஹிந்து பரிஷத்தின் வங்காள பிரிவு மனு தாக்கல் செய்துள்ளது.
அண்மையில் திரிபுராவில் உள்ள Sepahijala Zoological Park என்ற விலங்கியல் பூங்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட சிங்கத்தின் பெயரை தாங்கள் மாற்றவில்லை என்று வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். சிங்கம் வரும்போதே அதன் பெயர் சீதா என்று இருந்ததாகவும் வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த பெயர் விவகாரம் தொடர்பாக விஷ்வ ஹிந்து பரிஷத் தாக்கல் செய்த மனு நீதிபதி சவ்கத்தா பட்டாச்சார்யா முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனு பிப்ரவரி 20ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இந்துக்களின் புனிதக் கடவுளான ராமனின் மனைவி சீதாவுக்கு சிங்கத்திற்கு பெயர் வைப்பது ஒருபுறம் என்றால், அதை அக்பர் என்ற ஆண் சிங்கத்துடன் ஜோடி சேர்ப்பது அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் அனைத்து இந்துக்களுக்கும் ராமரும் சீதாவும் புனிதமான தெய்வங்கள் ஆனால் ஒரு சிங்கத்திற்கு சீதா என்று பெயரை வைத்து அக்பர் என்ற பெயர் கொண்ட சிங்கத்தின் துணையாக மாற்றுவது என்பது தெய்வநிந்தனை என்றும், இந்துக்களின் மத நம்பிக்கையின் மீதான நேரடி தாக்குதல் என்று விஷ்வ இந்து பரிஷத் தனது மனுவில் தெரிவித்துள்ளது.
பெயர் சர்ச்சையின் ஆணிவேர்
உத்தரபங்கா சம்பத் (Uttar Banga Sambad) என்ற பத்திரிகை ’சங்கீர் கோஜோ அஸ்தர் சீதா’ அதாவது கூட்டாளியை தேடி அலையும் அமைதியற்ற சிங்கம் என்ற தலைப்பின் கீழ் ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தது. ஆனால் தற்செயலாக ஆண் சங்கத்திற்கு அக்பர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றாலும், சீதா, அக்பரை தேடி அலைகிறாள் என்ற பொருள் தரும் கட்டுரை அநாகரீகமானது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
அக்பரைத் தேடி திரிபுராவில் இருந்து சீதா வந்தார் என்ற பொருள் படும் வார்த்தைகள், நாடு முழுவதும் உள்ள இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக பலர் கருதுகின்றனர்.
மேலும் படிக்க | அடித்து சொல்கிறேன் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் - கார்த்திக் சிதம்பரம்!
ஏகபத்தினி விரதர் ராமரின் மனைவி சீதா
அக்பர் இந்தியாவின் புகழ்பெற்ற முகலாய பேரரசர்கள் ஒருவர் என்பதும், சீதா என்பது வால்மீகி ராமாயணத்தின் கதாநாயகி. அவர் இந்து மதத்தில் ராமரின் மனைவியாக இடம் பிடித்தவர் என்பதும், மனைவியை பிரிந்த ராமர் ஏகபத்தினி விரதன் என்பதும், சீதாவை இராவணன் சிறை பிடித்து சென்றாலும், போர் தொடுத்து மனைவியை மீட்டு வந்தவர் இராமர் என்பதும் இந்திய வரலாறு.
அண்மையில் அயோத்தியாவில் ராமருக்கு கோயில் கட்டியதில், உலகம் முழுவதும் ராமநாமம் பரவிவரும் நிலையில், இந்த விவகாரம் வெடித்துள்ளது.
வன அதிகாரிகள் மற்றும் வங்காளத்தின் சபாரி பூங்கா இயக்குனரும் இந்த வழக்கு எதிர் தரப்பினர் ஆக்கப்பட்டுள்ளனர் இந்த மனு மீதான விசாரணை பிப்ரவரி 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமை என்று நடைபெறும்.
விசாரணையில், சீதா வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்படுவாரா அல்லது பெயர் மாற்றப்படுவாரா என்பதும் தெரியவில்லை. இல்லை, உத்தரபங்கா சம்பத் பத்திரிகைக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்பதும் பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
மேலும் படிக்க | இந்துகளுக்கு எதிரான கட்சியே பாஜக தான்... ஏன் தெரியுமா? - கனிமொழி சொல்லும் பாயிண்ட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ