டெல்லியில் வாகன கட்டுப்பாடு திட்டம் மீண்டும் அமல் செய்க.. தேசிய பசுமை தீர்ப்பாயம்

டெல்லியில் கடுமையான காற்று மாசு நிலவுகிறது. காற்று மாசு காரணமாக டெல்லியில்  நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற இலங்கை வீரர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். அந்த அளவுக்கு காற்று மாசு டெல்லியில் நிலவுகிறது. 

Last Updated : Dec 6, 2017, 07:54 PM IST
டெல்லியில் வாகன கட்டுப்பாடு திட்டம் மீண்டும் அமல் செய்க.. தேசிய பசுமை தீர்ப்பாயம் title=

டெல்லியில் கடுமையான காற்று மாசு நிலவுகிறது. காற்று மாசு காரணமாக டெல்லியில்  நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற இலங்கை வீரர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். அந்த அளவுக்கு காற்று மாசு டெல்லியில் நிலவுகிறது. 

காற்று மாசுவை குறைக்கும் செயல்திட்டத்தை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் டெல்லி அரசு இன்று சமர்பித்தது. அந்த அறிக்கையில், பெண்கள் என யாருக்கும் விலக்கு அளிக்கப்படாமல் வாகன கட்டுப்பாடு திட்டம் மீண்டும் டெல்லியில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை தொடர்ந்து டெல்லி அரசை கடுமையாக சாடியுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், மாசு தொடர்பாக இதுவரை எந்த வழக்கும் பதிவாகவில்லை. அரசு வெறுமனே பேச மட்டுமே செய்வதாகவும் களத்தில் இது செயல்படுவதும் இல்லை. டெல்லி அரசு அளிக்கும் வாக்குறுதியை பின்பற்றுவதுமில்லை என கூறியது. 

முன்னதாக, கடந்த திங்கள் கிழமை தேசிய பசுமை தீர்ப்பாயம், காற்று மாசுவை கட்டுப்படுத்துவது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யாத டெல்லி அரசுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தது. மேலும், இந்தியா- இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடத்தியதற்கும் தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்து இருந்தது.

Trending News