டெஹ்ராடூன்: திங்கள்கிழமையான் இன்று உத்தர்கண்டில் உள்ள உத்தர காசி என்ற இடத்தில் 100 மீட்டர் ஆழ பள்ளத்தாக்கில் வேன் விழுந்தது. இந்த விபத்தில் 9 பயணிகள் இறந்தனர். இந்த சம்பவம் கங்கோத்ரி நெடுஞ்சாலையில் நடந்தது. இவர்கள் கந்தோட்ரி டிம்மில் இருந்து திரும்பி வரும் வழியில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வேனில் மொத்தம் 15 பேர் இருந்தனர் என்ப தகவல் கிடைத்துள்ளது.
மாவட்ட மேலாண்மை உத்தியோகத்தர் தேவேந்திர பட்வால் இதுகுறித்து கூறுகையில், ரிஷிகேஷ் - கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் அமைத்துள்ள சாங்லாயில் நடந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சாலையில் ஏற்ப்பட்ட நிலச்சரிவு காரணமாக வேன் ஓட்டுனர் கட்டுபாட்டை இழந்தால், பைகிராதி நதி அருகே குழியில் வாகனம் விழுந்தது. காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Uttarakhand: 9 dead after a van fell into a gorge in Uttarkashi. pic.twitter.com/ORrop5wOgE
— ANI (@ANI) September 3, 2018