Uttar Pradesh 4 crore electric bill News : உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டா சி செக்டாரில் வசிக்கும் பசந்த் குமார் என்பவருக்கு மின்சாரத்துறை மெசேஜ் அனுப்பியுள்ளது. அதில் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் ஜூலை 18 ஆம் தேதி வரையிலான மின் உபயோகத்துக்கு நான்கு கோடியே 2 லட்சத்து 31 ஆயிரத்து 842 ரூபாய் (ரூ. 4,02,31,842.31) பில் செலுத்த வேண்டும் என மெசேஜ் வந்துள்ளது. ஜூலை 24 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் அந்த மெசேஜில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைப் பார்த்து ஆடிப்போன வீட்டு உரிமையாளர் பசந்த் குமாருக்கு ஒரு நிமிடம் தலையே சுத்திருச்சாம்.
ஏனென்றால் அந்த வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறாராம். அதில் ஒரே ஒருவர் மட்டும் தான் வசித்து வருகிறாராம். அதனால் மாதாந்திர சராசரி மின்கட்டணம் தான் எப்போதும் வரும் என தெரிவித்திருக்கும் பசந்த் குமார், இவ்வளவு கட்டணம் வந்தது எப்படி என தெரியவில்லை என கூறியுள்ளார். ரயில்வே ஊழியரான அவர் இப்போது ஷிம்லாவில் டிரெய்னிங்கில் இருக்கிறார். இது குறித்து உடனே நொய்டா மின்சார துறை அலுவலகத்தை பசந்த் குமார் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, டிஸ்காமின் ஜூனியர் என்ஜினியர் அந்தத் தொகை சரி செய்யப்பட்டு அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளாராம்.
இதுகுறிது பசந்த் குமார் பேசும்போது, " நான் வாடகைக்கு விட்டிருக்கும் வீடு மனைவி பிரியங்கா பெயரில் தான் இருக்கிறது. அதில் ஒரே ஒருவர் தான் வசித்து வருகிறார். அவரும் அவ்வளவாக எலக்ட்ரானிக் பொருட்களை எல்லாம் வைத்திருக்கவில்லை. மாதம் சராசரியான கட்டணம் மட்டுமே வந்துகொண்டிருந்தது. ஆனால் இம்முறை 4 கோடி ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என மெசேஜ் வந்ததும் கொஞ்சம் பதட்டமானேன். பின்னர் இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அழைத்து தெரிவித்தவுடன், கணக்கீட்டு தவறை ஒப்புக்ககொண்டு அதனை மாற்றிக் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்" என கூறினார்.
அப்பகுதிக்கு பொறுப்பில் இருக்கும் செயல் பொறியாளர் சிவம் திரிபாதி கூறுகையில், இது போன்ற முரண்பாடுகள் அரிதாகவே காணப்படுவதாகவும், மின்வாரியத் துறையினர் புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். நொய்டாவில் இதுபோன்ற சம்பவம் ஒன்றும் புதிதல்ல. 2015 ஆம் ஆண்டு வாட்ச் ஷோரூம் நடத்திய அமித் ஜெயின் என்பவருக்கு 4 கோடி ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என பில் அனுப்பப்பட்டிருந்தது. பின்னர் அது பத்தாயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் அடகு கடை வைத்திருக்கும் அதுல் குமார் என்பவருக்கு15 லட்சம் ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என மெசேஜ் வந்திருக்கிறது. பின்னர், அது அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, கட்டணம் திருத்தியமைக்கப்பட்டு பயனாளர்கள் அதை கட்டினர்.
மேலும் படிக்க | மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் சிக்கல்: உலகம் முழுவதும் பாதிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ