உலக சாதனைக்கான கின்னஸ் புத்தகத்தில் கும்பமேளா விழா!!

கும்பமேளா விழாவில் நேற்று ஒரே நேரத்தில் 500 பேருந்துகளை இயக்கிய நிகழ்வு, உலக சாதனைக்கான கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

Last Updated : Mar 1, 2019, 11:14 AM IST
உலக சாதனைக்கான கின்னஸ் புத்தகத்தில் கும்பமேளா விழா!! title=

கும்பமேளா விழாவில் நேற்று ஒரே நேரத்தில் 500 பேருந்துகளை இயக்கிய நிகழ்வு, உலக சாதனைக்கான கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த ஜனவரி 15ம் தேதி கும்பமேளா திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் குவிந்து வருகின்றனர். அந்த வகையில் இந்த விழாவையொட்டி, கின்னஸ் சாதனை முயற்சியாக, பிரயாக்ராஜ் நகரில், கொல்கத்தா -டெல்லி தேசிய நெடுஞ்சாலையில், ஒரே நேரத்தில் நேற்று 500 பேருந்துகள் இயக்கப்பட்டன. 

இதற்காக சுமார் 3.2 கி.மீ. தொலைவுக்கு பேருந்துகள் அணி வகுக்கப்பட்டு இயக்கப்பட்ட நிகழ்வு, உலக சாதனைக்கான கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. 

Trending News