இந்தியாவில் ஒமிக்ரான் (OMICRON) பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றுக்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதுவரை நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்டோர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கவிட்டுள்ள அம்மாநில அரசு, வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பியவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்து வருகிறது. குறிப்பாக, மும்பை(MUMBAI) மாநகராட்சி வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களின் வீடுகளுக்கே சென்று சோதனை செய்கிறது. இதில், 29 வயதான இளைஞர் ஒருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் கடந்த மாதம் நவம்பர் 9 ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து மும்பை திரும்பியுள்ளார். அவரிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை புனேவில் இருக்கும் ஆய்வகத்துக்கு அனுப்பி சோதனை செய்ததில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒமிக்ரான் (OMICRON) தொற்று சோதனை செய்து பார்த்ததில் அதிலும் பாசிடிவ் என முடிவுகள் வந்துள்ளது. அந்த இளைஞர் ஏற்கனவே பைசர் தடுப்பூசியை 2 முறை செலுத்தியிருக்கிறார். மேலும் கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக பூஸ்டர் டோஸூம் செலுத்தியுள்ளார். 3 டோஸ் செலுத்திக் கொண்ட ஒருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ALSO READ | Omicron அச்சத்துக்கு மத்தியில் ஆப்பிரிக்காவில் பரவும் மர்ம நோய்: 80 பேர் பலி!!
இது குறித்து பேசிய மருத்துவர்கள், 3 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவருக்கு ஒமிக்ரான் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இருப்பினும், 3 முதல் 4 வாரங்கள் காத்திருந்தால் மட்டுமே அதன் முடிவுகளை முழுமையாக அறிந்து கொள்ள முடியும். பூஸ்டர் டோஸ் போட்டுக் கொண்டவர்களுக்கு பாதிப்பின் வீரியம் குறைவாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறிய மருத்துவர்கள், அந்த நபருடன் தொடரில் இருந்த இருவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என விளக்கமளித்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR