மோடி விரும்பினால் காஷ்மீர் பிரச்சனையில் தலையிட தயார் -ட்ரம்ப்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி விரும்பினால் காஷ்மீர் பிரச்சனையில் தலையிட தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்!

Last Updated : Aug 2, 2019, 09:03 AM IST
மோடி விரும்பினால் காஷ்மீர் பிரச்சனையில் தலையிட தயார் -ட்ரம்ப்! title=

இந்திய பிரதமர் நரேந்திர மோடி விரும்பினால் காஷ்மீர் பிரச்சனையில் தலையிட தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்!

காஷ்மீர் பிரச்சனையை தீர்த்துக்கொள்வது இந்தியா- பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச்சார்ந்தது எனவும், இரு நாடுகளும் விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில், காஷ்மீர் பிரச்சனையில் உதவ தயராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அண்மையில் அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். இச்சுற்றுப்பயணத்தில் இம்ரான் கானுடனான சந்திப்புக்கு பிறகு  “பாகிஸ்தானுடனான காஷ்மீர் பிரச்சினையில், மத்தியஸ்தம் செய்யுமாறு பிரதமர் மோடி என்னை கேட்டுக்கொண்டார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

அதிபர் ட்ரம்பின் கருத்து இந்தியாவுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ட்ரம்பின் கருத்தை திட்டவட்டமாக மறுத்தது. 

இந்நிலையில், வாஷிங்டன்னில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமெரிக்க அதிபரிடம், காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்யும் முடிவை இந்தியா ஏற்க மறுத்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ட்ரம்ப், காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தை ஏற்றுக்கொள்வது என்பது மோடியிடம் தான் உள்ளது. 

காஷ்மீர் பிரச்சினையில் தலையிட வேண்டும் என்று இருநாடுகளும் விரும்பினால் உதவ தயாராக இருக்கிறேன். காஷ்மீர் பிரச்சனை இந்தியா- பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக நிலவி வருகிறது" என தெரிவித்துள்ளார்.

Trending News