இன்று ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக உர்ஜித் பட்டேல் பதவியேற்றுக் கொண்டார். அடுத்த 3 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார்.
ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம் ராஜனின் பதவிகாலம் நேற்றுடன் முடிவடைந்தது. அதனையடுத்து புதிய கவர்னராக உர்ஜித் பட்டேல் பதவியேற்றுக் கொண்டுள்ளார். ஆர்.பி.ஐ-யின் 24-வது கவர்னராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று முறைப்படி ரிசர்வ் வங்கியின் பொறுப்பை உர்ஜித் பட்டேல் ஏற்றுக் கொண்டுள்ளார். இவர் ஏற்கனவே ரி்சர்வ் வங்கியின் துணை கவர்னராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Dr. Urjit R. Patel takes over as RBI Governorhttps://t.co/97TRiKSila
— ReserveBankOfIndia (@RBI) September 5, 2016
RBI Governor argues for Independent Central Bank for Macroeconomic Stability of the Countryhttps://t.co/JJMFANMQM6
— ReserveBankOfIndia (@RBI) September 5, 2016