UPSC CSE முதல் நிலை தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியீடு; பதிவிறக்கம் செய்யும் முறை

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அட்டவணையின்படி, சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வு அடுத்த மாதம் ஜூன் 05, 2022 அன்று நடத்தப்பட உள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 10, 2022, 02:08 PM IST
UPSC CSE முதல் நிலை தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியீடு; பதிவிறக்கம் செய்யும் முறை title=

UPSC CSE அட்மிட் கார்டு: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்  (UPSC) 2022 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வுக்கான அனுமதி அட்டையை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் அனுமதி அட்டையைப் பெறலாம். விண்ணப்பதாரர்கள் upsconline.nic.in என்ற யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று தங்களின் அட்மிட் கார்டை சரிபார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அட்மிட் கார்டைப் பதிவிறக்கும் செயல்முறை  கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும்

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அட்டவணையின்படி, சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு அடுத்த மாதம் ஜூன் 05, 2022 அன்று நடத்தப்பட உள்ளது. கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நியமிக்கப்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு நடத்தப்படும். 

அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?

கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்கள் அட்மிட் கார்டை சரிபார்த்து பதிவிறக்கம் செய்யலாம்.

1. விண்ணப்பதாரர்கள் முதலில் UPSC யின் அதிகாரப்பூர்வ இணையதளமான upsconline.nic.in என்ர வலைதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. இப்போது முகப்புப் பக்கத்தில் தோன்றும் முதல்நிலைத் தேர்வு அனுமதி அட்டை தொடர்பான இணைப்பைக் கிளிக் செய்யவும். இப்போது நீங்கள் ஒரு புதிய பக்கத்திற்கு வருவீர்கள்.

மேலும் படிக்க | முதலீட்டு டிப்ஸ்: உங்களை கோடீஸ்வரன் ஆக்கும் 15 x 15 x 15 பார்முலா

3. உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி போன்ற தகவல்களை இங்கே உள்ளிட்டு உள்நுழைக.

4. இப்போது உங்கள் அட்மிட் கார்டு  திரையில் காட்டப்படும்.

5. அதை சரிபார்த்து பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

அட்மிட் கார்டில் இருக்கும் தகவல்கள்

விண்ணப்பதாரர்களின் பெயர், பட்டியல் எண், தேர்வு மையம், தேர்வு நேரம் மற்றும் அது தொடர்பான முக்கிய வழிகாட்டுதல்கள் UPSC ஆல் வழங்கப்பட்ட சிவில் சர்வீசஸ் பிரிலிமினரி தேர்வு, 2022 இன் அனுமதி அட்டையில் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் அவற்றைக் கவனமாகப் படித்து, தேர்வின் போது பின்பற்ற வேண்டும். 

அட்மிட் கார்டு தேர்வுக்கான முக்கிய ஆவணம் என்பதை விண்ணப்பதாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அது இல்லாமல் தேர்வு மையத்தில் சேர்க்கை அனுமதிக்கப்படாது. விண்ணப்பதாரர்கள் தங்களுடன் அடையாளச் சான்று மற்றும் புகைப்படத்தையும் கொண்டு வர வேண்டும்.

யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் ப்ரிலிமினரி தேர்வு, 2022 அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்ய முடியாத விண்ணப்பதாரர்கள் upsc@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சலும் அனுப்பலாம்.

மேலும் படிக்க | ரிலையன்ஸ் பவர் சாதனையை முறியடித்த LIC IPO; பாலிசிதாரர்கள் அமோக வரவேற்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News