காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார் ரீட்டா பகுகுணா!!

Last Updated : Oct 20, 2016, 06:38 PM IST
காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார் ரீட்டா பகுகுணா!! title=

உத்திர பிரதேசத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இப்போதே அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி 3,500 கி.மீ., துார கிசான் யாத்திரை மேற்கொண்டார். இந்த கிசான் யாத்திரை மிகப்பெரிய வெற்றி என காங்கிரஸ் தரப்பு கூறிவருகிறது. இந்நிலையில் உ.பி.,யில் பெண் காங்கிரஸ் தலைவராக இருந்த ரீட்டா பகுகுணா பா.ஜ.,வில் இணைந்தார். இது காங்கிரஸ்க்கு பெரும் பின்னடைவு எனக் கூறப்படுகிறது. 

இன்று பா.ஜ., தலைவர் அமித் ஷா முன்னிலையில் ரீட்டா பகுகுணா பா.ஜ.,வில் இணைந்தார். பின்னர் அவர் பேட்டியில் கூறியதாவது:- காங்கிரில் 24 வருடம் அரசியல் நடத்தியுள்ளேன். தற்போது அங்கிருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்துள்ளேன். நாட்டு நலனுக்காக கடுமையான முடிவை எடுத்துள்ளேன். எம்.எல்.ஏ., பதவியிலிருந்தும் ராஜினாமா செய்து விட்டேன். பா.ஜ., ஆட்சிக்கு கடுமையாக உழைப்பேன். சர்ஜிக்கல் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்பது ஏற்க முடியாதது. அனைத்து உலக நாடுகளும் சர்ஜிக்கல் தாக்குதலை அங்கிகரித்துள்ள நிலையில், ராகுலின் விமர்சனம், என்னை கோபப்பட வைத்துள்ளது. ராகுல் தலைமையை யாரும் ஏற்கவில்லை எந்த மாநில தலைவர்களும் ராகுலிடம் தங்களது கருத்தை தெரிவிக்க முடியவில்லை. உ.பி., மக்கள் காங்கிரசை நிராகரித்து விட்டனர். மோடியும் பா.ஜ., மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும் என அவர் கூறியுள்ளார்.

Trending News