உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த 22-ம் தேதி, 24-ம் தேதி மற்றும் 29-ம் தேதி என 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பிஜேபி வெற்றி பெற்றதை அடுத்து, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் முதலமைச்சாராக பதவியேற்றார். அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த மாபெரும் வெற்றி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை இன்று காலை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து பேசுகையில், மோடியின் பார்வை மற்றும் அமித் ஷாவின் வழிகாட்டுதலின் பேரில் பிஜேபியின் வெற்றியை யோகி ஆதித்யநாத், ஒரு "வரலாற்று வெற்றி" என்று சுட்டி காட்டியுள்ளார்.
மேலும்,இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் மோடி கூறுகையில்;-உள்ளாட்சி தேர்தலில் பிஜேபி வெற்றி பெற்றதை அடுத்து, 2019 ஆம் ஆண்டு வரப்போகும் லோக் சபா தேர்தலில் நூறு சதவீதம் வெற்றியை அடைவது உறுதி என்று பெருமையுடம் கூறினார்.