உன்னாவ் பாலியல் வன்கொடுமை தொடர்பான அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்றுகிறோம், 7 நாளில் விசாரித்து
முடிக்க வேண்டும் என சிபிஐக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு!!
பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர் மீது உன்னாவ் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி பாலியல் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு உன்னாவ் சிறுமி சென்ற கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சிறுமியின் உறவினர்கள் இருவர் உயிரிழந்தனர். சிறுமி மற்றும் அவரது வழக்கறிஞர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். இதில் சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சிறுமி கார் விபத்து தொடர்பாக எழுந்த புகாரையடுத்து ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங்கை கட்சியிலிருந்து நீக்குவதாக தலைமை அறிவித்துள்ளது.
புகாரளித்த பெண் பயணம் செய்த கார் மீது மோதி விபத்துக்குள்ளாக்கிய லாரியின் உரிமையாளர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பாஜக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட, பாலியல் புகார் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள குல்தீப் சிங் செங்கார் சமாஜ்வாதி கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உன்னாவ் சிறுமி பாலியல் வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறுமி விபத்து குறித்து விசாரணை நடத்த எவ்வளவு காலம் வேண்டும் என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒரு மாதத்திற்குள் விசாணையை முடிப்பதாக கூறினார். அதற்கு, அவ்வளவு காலம் தரமுடியாது என கூறிய நீதிபதி, 7 நாளில் விசாணையை முடிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.
மேலும், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமி மற்றும் விபத்தில் சிக்கிய வழக்கறிஞர் ஆகியோரை விமானம் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லமுடியுமா என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி மருத்துவரிடம் ஆலோசித்து பதிலளிக்குமாறு கூறி வழக்கை மதியம் 2 மணிக்கு ஒத்திவைத்தார்.
King George Medical University hospital, Lucknow on #Unnao rape survivor & her lawyer admitted in the hospital: Their condition is critical. Both are on ventilator. But their condition is stable like yesterday. Their treatment is being done by team of experts at KGMU,free of cost
— ANI UP (@ANINewsUP) August 1, 2019