சீனா மீது நேரு கொண்ட அன்பால் இந்தியாவுக்கு பெரிய இழப்பு -உள்துறை அமைச்சர் அமித் ஷா

Amit Shah Blames Congress: சீனா மீது நேரு கொண்ட அன்பால் இந்தியாவுக்கு பெரிய இழப்பு. நரேந்திர மோடி அரசு ஆட்சியில் இருக்கும் வரை ஒரு அங்குல நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியாது -அமித் ஷா

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 13, 2022, 08:49 PM IST
  • விளக்கம் வேண்டும்... காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளி.
  • காங்கிரஸின் ராஜீவ் காந்தி அறக்கட்டளை விதியை மீறி செயல்பட்டது.
  • நாட்டின் ஒரு அங்குல நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியாது.
சீனா மீது நேரு கொண்ட அன்பால் இந்தியாவுக்கு பெரிய இழப்பு -உள்துறை அமைச்சர் அமித் ஷா title=

Tawang Clash: அருணாச்சல பிரதேசத்தில் எல்ஏசியில் இந்திய மற்றும் சீன படைகளுக்கு இடையேயான மோதல் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், நரேந்திர மோடி அரசு ஆட்சியில் இருக்கும் வரை ஒரு அங்குல நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சீனா விவகாரத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் மீது சரமாரியாக அவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது காங்கிரஸ் கட்சியின் அங்கமான ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சீனத் தூதரகத்திடம் இருந்து ரூ.1.35 கோடி நன்கொடையாக ஒரு பெரும் தொகையை பெற்றது மற்றும் சீனாவின் மீதான ஜவஹர்லால் நேருவின் பாசம் தான் எல்லைப் பிரச்சனைக்கு (எல்ஏசி மோதல்) முக்கிய காரணம் என்றும் அமித் ஷா கூறினார். எல்லை பிரச்சனைக்கும், காங்கிரஸ் மற்றும் நேருக்கு என்ன தொடர்பு, ராஜீவ் காந்தி அறக்கட்டளை அங்கீகாரம் ஏன் ரத்து செய்யப்பட்டது என்பது குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.

மேலும் படிக்க: எல்லையில் நிலைமை சீராக உள்ளது -தவாங் மோதல் குறித்து சீனா

அத்துமீறும் சீன இராணுவம்:
டிசம்பர் 9, 2022 அன்று தவாங் மாவட்டத்தில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு நாட்டு ராணுவ வீரர்கள் பலர் காயமடைந்துள்ளனர். இந்த மோதலுக்கு முக்கிய காரணமாக, இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். இது முதல் முறையல்ல, அவ்வப்போது தொடர்ந்து எல்லைக் கோட்டை தாண்டி மோதலை தூண்டுவது சீனா ராணுவ வீரர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். ஒவ்வொருமுறையும் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.

காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளி:
இதற்கிடையில் சீனா ராணுவ இந்திய எல்லைக்குள் நுழைந்து விட்டது. இருநாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், எல்லையில் பதற்றம் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அவைகள் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில் கேள்வி நேரத்தை கூட அனுமதிக்காத எதிர்க்கட்சிகளை, குறிப்பாக காங்கிரஸ் கட்சியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையாக விமர்சித்தார்.

மேலும் படிக்க: அருணாச்சல பிரதேசத்தில் வாலாட்டிய சீன ராணுவம்... இந்திய சீன படைகள் மோதல்!

காங்கிரஸ் கட்சி பதற்றம் அடைய காரனம இதுதான்: அமித் ஷா
நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர், "நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தவாங் மோதல் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளிப்பார் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தெளிவாகக் கூறினர். ஆனாலும் கேள்வி நேரத்தை நடத்த எதிர்க்கட்சிகளை அனுமதிக்கவில்லை. அப்பொழுது தான் கேள்வி நேரத்தில் கேட்கப்படும் கேள்விப்பட்டியலைப் பார்த்தேன். அதன் பிறகு தான் புரிந்தது "காங்கிரஸ் கட்சி ஏன் இந்த அளவு பதற்றம் அடைகிறது" என்று கூறினார். 

காங்கிரஸின் ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் (RGF) வெளிநாட்டு நிதிபங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட விதிகளை (FCRA) மீறியதால், அதன் உரிமம் ரத்து செய்யப்பட்டது தொடர்பான கேள்வி அங்கு எழுப்பப்பட்டு இருந்த கேள்வி எண் 5ஐப் பார்த்ததும் காங்கிரஸின் கவலை எனக்குப் புரிந்தது. அதனால்தான் காங்கிரஸ் விவாதத்தில் இருந்து தப்பிக்கத் தொடர்ந்து கேள்வி நேரத்தை நடத்த விடாமல் இடையூறு செய்தனர் என்றார்.

மேலும் படிக்க: 'மோடியை கொல்ல தயாரா இருங்க...' காங்கிரஸ் தலைவரின் சர்ச்சை பேச்சால் பூகம்பம்!

இந்தய ராணுவ வீரர்கள் துணிச்சலை பாராட்டிய அமித் ஷா:
நாட்டில் பாரதீய ஜனதா கட்சி (பாஜக) ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தை யாரும் ஆக்கிரமித்திருக்கவில்லை, யாராலும் ஆக்கிரமிக்க முடியாது என அமித்ஷா கூறினார். அதேநேரத்தில் ராணுவ வீரர்களையும் உள்துறை அமைச்சர் பாராட்டினார். டிசம்பர் 8 இரவு மற்றும் டிசம்பர் 9 காலை, எல்லைக்குள் நுழைந்த சீனப் படைகளை (பிஎல்ஏ துருப்புக்கள்) நமது வீரர்கள் விரட்டியடித்து, நமது நாட்டின் நிலத்தை பாதுகாத்தனர் என்றும், நமது ராணுவ வீரர்கள் காட்டிய துணிச்சலை நான் பாராட்டுகிறேன் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

எல்லை பிரச்சனைக்கு நேரு தான் காரணம்:
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் நிரந்தர இடம், சீனா மீது நேரு வைத்திருந்த அன்பின் காரணமாக தியாகம் செய்யப்பட்டது. அந்த இடம் சீனாவுக்கு தாரைவார்க்கப்பட்டது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

மேலும் படிக்க: ஆபாச வீடியோவினால் பெயில் ஆனேன்! கேஸ் போட்ட இளைஞர்; கடுப்பான நீதிமன்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News