Budget 2023: அதிகரித்து வரும் சிகிச்சைச் செலவில் இருந்து நிவாரணம் பெறலாம்

Union Budget 2023: கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, சுகாதார பாலிசியின் பிரீமியம் கணிசமாக அதிகரித்துள்ளது. மறுபுறம், வருமான வரியின் 80டி பிரிவின் கீழ் ஹெல்த் பாலிசி பிரீமியத்தின் விலக்கு வரம்பு கடந்த பல ஆண்டுகளாக அதிகரிக்கப்படவில்லை. மத்திய பட்ஜெட் 2023 இல் இந்த வரம்பை அதிகரிக்க நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 18, 2023, 10:04 AM IST
  • சிகிச்சைச் செலவில் இருந்து உங்களுக்கு பெரும் நிவாரணம்.
  • வருமான வரியின் 80டி பிரிவின் கீழ் ஹெல்த் பாலிசி.
  • மத்திய பட்ஜெட் 2023 இல் புதிதாக என்ன எதிர்ப்பார்க்கலாம்.
Budget 2023: அதிகரித்து வரும் சிகிச்சைச் செலவில் இருந்து நிவாரணம் பெறலாம் title=

நாளுக்கு நாள் சிகிச்சைக்கான செலவு அதிகரித்து வருகிறது,இதனால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். சுகாதார சேவைகளின் பணவீக்க விகிதம் சில்லறை பணவீக்க விகிதத்தை விட அதிகமாக உள்ளதால் தற்போது ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் பிரீமியமும் அதிகரித்துள்ளது. அந்தவகையில் அதிகரித்து வரும் சிகிச்சைச் செலவு காரணமாக மக்களுக்கு நிவாரணத்தை அளிக்கும் விதமாக மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் சில அறிவிப்புகளை வெளியிடயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி 2023 யூனியன் பட்ஜெட்டில், வருமான வரிச் சட்டத்தின் 80டி பிரிவின் கீழ் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தின் விலக்கு வரம்பு அதிகரிக்கப்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் வரி செலுத்துவோர் பயனடைவார்கள்.

மக்கள் தொகையில் பெருபாலானோரிடம் ஹெல்த் பாலிசி கிடையாது
இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் மிகக் குறைந்த விகிதத்தில் மட்டுமே ஹெல்த் பாலிசி இருக்கிறது. அதனால்தான் பெரும்பாலான மக்கள் சிகிச்சைக்கான செலவை தங்கள் பாக்கெட்டில் இருந்து ஏற்க வேண்டியிருக்கிறது. கொரோனா தொற்றுக்குப் பிறகு, மக்களின் மருத்துவச் செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. இது நடுத்தர குடும்பங்களின் பட்ஜெட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் ​​பிரிவு 80டியின் கீழ், 60 வயதுடையவர், ஹெல்த் பாலிசிக்கான பிரீமியத்தில் ஆண்டுதோறும் ரூ.25,000 கழிக்க முடியும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விலக்கு வரம்பு ரூ.50,000 ஆகும்.

மேலும் படிக்க | Budget 2023: பட்ஜெட்டில் நுகர்வு செலவினங்களுக்கான வரி தள்ளுபடி பலன்கள் எவ்வளவு?

பிரிவு 80டியின் வரம்பை அதிகரிக்க வேண்டும்
இது குறித்து ஆப்டிமா மனேஜர்ஸ் நிறுவனர் பங்கஜ் மத்பால், சிகிச்சை முற்றிலும் இலவசம் இல்லாத நாட்டில், எந்த வரம்பும் இல்லாமல் மருத்துவச் செலவில் 100% விலக்கு அளிக்க அரசு அனுமதிக்க வேண்டும். இந்தியாவில் அதிக ஹெல்த் பாலிசி பிரீமியத்திற்கு ஒரு காரணம், தற்போது பலரிடம் ஹெல்த் பாலிசி இல்லை என்பது தான். 2023 யூனியன் பட்ஜெட்டில் ஹெல்த் பாலிசியின் பிரீமியத்தின் மீதான விலக்கு வரம்பு அதிகரிக்கப்பட்டால், அது காப்பீட்டுத் துறைக்கு ஊக்கமளிக்கும்.

மூத்த குடிமக்களுக்கு கூடுதல் நிவாரணம் தேவை
அதேபோல் மூத்த குடிமக்கள் மீது அதிக அழுத்தம் உள்ளது. ஏனென்றால், அவர்களுக்கு 80டி பிரிவின் கீழ் வரம்பு ரூ.50,000 மட்டுமே உள்ளது என்பது தான். மருத்துவச் செலவு மிகவும் அதிகமாகிவிட்ட நிலையில், கூடுதல் காப்பீட்டுடன் பாலிசி எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
அதிக காப்பீடு கொண்ட பாலிசிக்கான பிரீமியமும் அதிகம். எனவே, ஹெல்த் பாலிசியின் பிரீமியத்தின் மீதான விலக்கு வரம்பை ரூ.50,000 ஆக உயர்த்த வேண்டும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: பட்ஜெட்டுக்கு பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் செய்தி, ஊதியம் உயரும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News