MP; 8-வயது சிறுமி பாலியல் வழக்கில் இருவருக்கு மரண தண்டனை!

மத்திய பிரதேச மாநிலத்தில் 8-வயது சிறுமியை வன்கொடுமைக்கு ஆளாக்கிய இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 21, 2018, 04:43 PM IST
MP; 8-வயது சிறுமி பாலியல் வழக்கில் இருவருக்கு மரண தண்டனை! title=

மண்ட்சார்: மத்திய பிரதேச மாநிலத்தில் 8-வயது சிறுமியை வன்கொடுமைக்கு ஆளாக்கிய இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது!

மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சார் மாவட்டத்தின் பள்ளி ஒன்றில் இருந்து 8-வயது சிறுமி ஒருவர் கடந்த ஜூன் 26-ஆம் நாள் கடத்தப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக இச்சிறுமியின் பெற்றோர் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையினை மேற்கொண்ட காவல்துறையினர் அன்றையே தினமே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், அச்சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

மருத்துவ பரிசோதனையில் அச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்ய முயற்சித்துள்ளது தெரியவந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி தீவிர சிகிச்சைக்கு பின் உடல் நலம் பெற்றார்.

இதற்கிடையில் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குற்றவாலிகள் இர்ஃபான் மற்றும் ஆசிப் ஆகிய இருவரை காவல்துறையினர் CCTV காட்சி உதவியுடன் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.

கடந்த இரண்டு மாதங்களா இவ்வழக்கின் விசாரணை மண்ட்சார் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று குற்றவாளிகள் இருவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Trending News