நொய்டாவில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் சுமார் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்!
உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் ஷா பரி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் 6 மாடி கட்டிடம் திடீரென அதன் அருகாமையில் இருந்த கட்டிடம் மீது இடிந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து ANI தகவலின் படி, இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி சுமார் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்புப்பணியில் தீயணைப்பு மற்றும் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Latest visuals from Greater Noida's Shah Beri village where two buildings collapsed last night. Three bodies have been recovered so far. Three people have been arrested in connection with the incident. Search and rescue operation is underway. More details awaited. pic.twitter.com/CGMLUIgcdD
— ANI UP (@ANINewsUP) July 18, 2018
இந்த விபத்தில் காயமடைந்தவர்களை சிகிச்சைகாக அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில், இருவர் ஆண்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
2 male dead bodies have been recovered. 4 NDRF teams & dog squad are present on the spot, chances of any victim being alive are scant. Operations will continue till all victims are rescued: PK Srivastava, NDRF Commandant on building collapse in Greater Noida's Shah Beri village pic.twitter.com/Llhi9SS5Ku
— ANI UP (@ANINewsUP) July 17, 2018
#WATCH: Dog squad has been deployed at the building collapse spot in Greater Noida's Shah Beri village. 4 NDRF teams are present. (earlier visuals) pic.twitter.com/yAxiXATHNB
— ANI UP (@ANINewsUP) July 18, 2018