சர்வதேச அரங்கில் சிறகு விரிக்கும் “Koo"; நைஜீரியாவில் காலடி வைத்தது

இந்தியாவில் உருவாக்கப்பட்ட (Made in Indai) சமூக வலைத்தள நிறுவனமான கூ , நைஜீரியாவில் கால் பதித்து, சர்வதேச அரங்கில் தனது சிறகை விரிக்கத் தொடங்கி விட்டது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 10, 2021, 02:18 PM IST
  • இந்தியாவில் உருவாக்கப்பட்ட (Made in India) சமூக வலைத்தள நிறுவனம் கூ ஆகும்.
  • நைஜீரியாவில் கால் பதித்து, சர்வதேச அரங்கில் தனது சிறகை விரிக்கத் தொடங்கி விட்டது.
  • டுவிட்டர் போன்ற தோற்றத்துடன் காணப்படும், இந்த கூ செயலி மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது.
சர்வதேச அரங்கில் சிறகு விரிக்கும் “Koo"; நைஜீரியாவில் காலடி வைத்தது title=

 

ஆப்ரிக்கா நாடுகளில் ஒன்றாக இருக்கும் நைஜீரியா (Nigeria)  அதிபர் முகம்மது புஹாரி (President Muhammadu Buhari), டிவிட்டர், உள்நாட்டு பிரிவினைவாதிகளை எச்சரிக்கும் விதித்தில் பதிவிட்ட ட்விட்டர் பதிவு ஒன்றை,  சமூக ஊடக தளத்தின் கொள்கையை மீறுவதாக உள்ளது என குற்றம் சாட்டிய ட்விட்டர் ‘தவறான நடத்தை' என கூறி, அந்த பதிவை அகற்றியதோடு, அவரது ட்விட்டர் கணக்கை 12 மணி நேரம் தடை செய்தது.

இதை அடுத்து பாரபட்சமான முறையில் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய அதிபர், ட்விட்டரை (Twitter) அந்நாட்டில் உடனடியாக தடை செய்தார். 

இதையடுத்து, இந்தியாவில் உருவாக்கப்பட்ட (Made in India) சமூக வலைத்தள நிறுவனமான கூ , நைஜீரியாவில் கால் பதித்து, சர்வதேச அரங்கில் தனது சிறகை விரிக்கத் தொடங்கி விட்டது.  கூ (koo) என்பது ட்விட்டருக்கு போட்டியாக இந்தியாவின் உருவாக்கப்பட்ட சமூக ஊடக தளமாகும்.

ட்விட்டரை (Twitter)  தடைசெய்த பின்னர் கூ சமூக ஊடக தளத்திற்கு, அனுமதி அளிக்கும் நைஜீரிய அரசாங்கத்தின் முடிவு ட்விட்டருக்கு மாற்று தளமாக, கூவில் நிலையை வலுப்படுத்துகிறது. இந்தியாவில் கூட, ட்விட்டருக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில்  கருத்து வேறுபாடுகளின் பின்னணியில் கூ (Koo) சமூக ஊடக தளம் சர்வதேச அளவில் கால் பதித்துள்ளது முக்கியமாக பார்க்கப்படுகிறது.

ALSO READ | நைஜீரியாவில் ட்விட்டருக்கு தடை;  அதிரடி நடவடிக்கைக்கான காரணம் என்ன

டுவிட்டர் போன்ற தோற்றத்துடன் காணப்படும், இந்த கூ செயலி மஞ்சள் நிறத்தில்  தோற்றத்தில் காணப்படுகிறது. அகமதாபாத் இந்திய மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் மாணவரான அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மயங்க் பிடாவட்கா ஆகியோரால்  உருவாக்கப்பட்ட கூ,  இந்தியாவில் ட்விட்டருக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டது.இதற்கு த்கற்போது கணிசமான அளவில் பயனர்களும் உள்ளனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10 கோடி பயனர்கள் என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறது.

ALSO READ | Israel: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் நாற்காலியை அசைத்து பார்க்கும் பென்னட்..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News