ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் நேற்று (செப். 11) நடைபெற்ற பாஜகவின் பரிவர்தன் சங்கல்ப் யாத்திரையின் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய நீர்வளத்துறை அமைச்சர், "நம் முன்னோர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து பாதுகாத்து வந்த சனாதன தர்மத்தை சிலர் முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கின்றனர்” என்றார்.
"இனி அவர்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். சனாதன தர்மத்திற்கு எதிராக பேசுபவர்கள் அவ்வாறு பேசினால் அவர்களின் நாக்கை பிடுங்குவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதை அலட்சியமாகப் பார்ப்பவர்கள், இதுபோன்ற ஒவ்வொரு கண்ணையும் பிடுங்குவோம்” என்று பேரணியில் அமைச்சர் கூறினார். சனாதன தர்மத்திற்கு எதிராக பேசும் எவராலும் நாட்டில் அரசியல் அதிகாரத்தையும் அந்தஸ்தையும் நிலைநிறுத்த முடியாது என கஜேந்திர சிங் கூறினார்.
AIMIM கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி மத்திய அமைச்சர் பேசிய வீடியோவை ட்வீட் செய்து, பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிட்டு, "ஜி 20 முடிந்து, அறிவிப்பின் 7ஆவது பாய்ண்டுக்கு தர்போது எந்த சம்பந்தமும் இல்லை என்பதால், நரேந்திர மோடி அமைச்சரவையின் மாண்புமிகு அமைச்சர் வன்முறையை ஆதரிக்கிறார். எனவே இப்போது அது "ஓபன் சீசன்" ஆகப் போகிறது" என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சனாதன தர்மம் குறித்து தமிழ்நாடு அமைச்சரும், திமுக இளைஞரணி தலைவரும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு நாடு முழுவதும் பாஜக தலைவர்களும், வலதுசாரி அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இருப்பினும், உதயநிதியின் பேச்சுக்கு பலரும் ஆதரவு தெரிவித்தும் கருத்து வெளியிட்டனர். பிரகாஷ் ராஜ் போன்றோரும் உதயநிதியின் பேச்சுக்கு ஆதரவளித்திருந்தார்.
மேலும் படிக்க | இந்தியாவில் நடந்த ஜி20 மாநாடு ஒரு முழுமையான வெற்றி: அமெரிக்கா
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரின் கருத்துக்கு பாஜக எம்பி சாத்வி பிரக்யாவும் பதிலளித்துள்ளார். அதில் அவர், "சனாதன தர்மத்தை ஒழிக்கும் தகுதி யாருக்கும் இல்லை, சனாதன தர்மத்தை பற்றி பேசும் உதயநிதி, நடிகர் பிரகாஷ் ராஜ் போன்றவர்கள் நாட்டுக்கு எதிராக பேசும் வில்லன்களே தவிர ஹீரோக்கள் அல்ல. நாம் என்ன செய்கிறோம் என்பது குறித்து அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. சனாதன தர்மத்தை தொழுநோய், மலேரியா, டெங்கு, எய்ட்ஸ் போன்ற நோய் என்று சொன்னவர்களும் இந்த நோய்களின் துன்பத்தை அனுபவிக்க வேண்டும், இதுவே இறைவனிடம் என் பிரார்த்தனை" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கு எதிரானது என்றும் அதை ஒழிக்க வேண்டும் என்றும் கூறினார். சனாதன தர்மத்தை கொரோனா வைரஸ், மலேரியா மற்றும் டெங்கு வைரஸ் மற்றும் கொசுக்களால் ஏற்படும் காய்ச்சலுக்கு ஒப்பிட்டு, இதுபோன்ற விஷயங்களை எதிர்க்கக்கூடாது, அழிக்க வேண்டும் என்றார்.
சனாதன தர்மத்தைப் பின்பற்றும் 80 சதவீத மக்களை "இனப்படுகொலை" செய்ய உதயநிதி அழைப்பு விடுத்ததாக பாஜகவின் தகவல் தொழில்நுட்பத் துறைப் பொறுப்பாளர் அமித் மாளவியா கூறியது இந்த எதிர்ப்புகளை மேலும் தூண்டியது.
மற்றொரு சம்பவத்தில், கடந்த ஆண்டு ராஜஸ்தான் அமைச்சர் சாந்தி தரிவால், பாலியல் பலாத்கார குற்றத்துடன் ஆண்மையை தொடர்புபடுத்தி பேசியிருந்தார். அதற்கு, மத்திய அமைச்சர் தாக்கி பேசினார். அமைச்சரின் அந்த கருத்துகளுக்காக காங்கிரஸ் தலைவர் அரபிக்கடலில் வீசப்பட வேண்டும் என்றார்.
மாநிலத்தின் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சராக இருக்கும் தாரிவால், 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், மாநில சட்டமன்றத்தில் கற்பழிப்புகளை நியாயப்படுத்தும் விதமாக "ராஜஸ்தான் ஆண்களின் மாநிலம்" என்று பேசி ஒரு சர்ச்சையை கிளப்பினார்.
அவரது பேச்சுக்கு தற்போது பதிலளித்த ஷெகாவத், ராஜஸ்தான் உண்மையில் "ஆண்களின் மாநிலம்" என்றும், அதன் "ஆண்மை" இந்து மதத்தையும் சனாதன தர்மத்தையும் உயிர்ப்புடன் வைத்திருப்பதாகவும் கூறினார். ஆனால் அவர் தரிவாலின் கருத்தை அந்த "ஆண்மைக்கு" ஒரு கறை என்று விவரித்தார்.
மேலும் படிக்க | Nipah virus: கேரளாவிற்கு வந்துவிட்டதா நிபா வைரஸ்! சந்தேகத்திற்குரிய மரணங்களால் பீதி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ