கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹரிப்பூரிலிருந்து கோலார் சந்தைக்கு விவசாயி ஒருவர் தனது பொலிரோ ஜிபில் தக்காளியை ஏற்றிக்கொண்டு பயணித்துள்ளார். அப்போது அந்த பொலிரோ வாகனத்தின் மீது மர்ம கும்பல் வந்த கார் ஒன்று மோதியதாக சொல்லப்படுகிறது . . இதனால் அந்த மர்ம கும்பல் வந்த காரின் கண்ணாடி உடைந்துள்ளது இதனை அடுத்து அந்தக் காரில் இருந்து இறங்கிய அந்த மர்ம நபர்கள் 10 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறி விவசாயியிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
பின்னர் அந்த மர்ம கும்பல் விவசாயியையும் பொலிரோ கார் டிரைவரையும் வலுக்கட்டாயமாக தங்களுடன் அழைத்துச் சென்று சிறிது தூரம் சென்ற பிறகு ஒரு இடத்தில் இறக்கி விட்டு விட்டு மாயமாகியுள்ளனர். பின்னர் அந்த விவசாயி மற்றும் கார் டிரைவர் இருவரும் தங்களது பொலிரோ வாகனம் நிறுத்தப்பட்ட இடத்திற்கு சென்ற போது தான் அதிர்ச்சி காத்திருந்தது. தக்காளியை ஏற்றி வந்த வாகனம் அந்த இடத்தில் இல்லை. பதறிப்போன அந்த விவசாயி இது பற்றி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.மேலும் அந்த தக்காளி வாகனத்தில் 210 பெட்டிகளில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தக்காளிகள் இருந்துள்ளது. இது பற்றி வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தக்காளியை ஏற்றி வந்த காரை திருடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்..
நாடு முழுவதும் தக்காளி விலை அதிகரித்திருக்கும் நிலையில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயிலிருந்து 150 ரூபாய் வரை நாடு முழுவதும் விற்கப்படுகிறது. ஏற்கனவே உத்தரபிரதேச மாநிலம் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தக்காளிக்கு ஜெட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நகைச்சுவையாக தெரிவித்திருந்தார். தற்போது உள்ள நிலைமையை பார்த்தால் உண்மையிலேயே தக்காளிக்கு ஜெட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் போல என நெட்டிசன்களும் வகை வகையாக தக்காளியை வைத்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும்... பெட்ரோல் டீசம் விலை குறையாதது ஏன்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ