புதுடெல்லி / ராஞ்சி: ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் (Hemant Soren) இன்று பதவியேற்பார். பிரதமர், அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள், மூத்த அரசியல் தலைவர்கள் மற்றும் அனைத்து மக்களும் தங்கள் பதவியேற்பு விழாவில் (Hemant Soren Oath Ceremony) கலந்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா செய்தித் தொடர்பாளரும் பொதுச் செயலாளருமான சுப்ரியோ பட்டாச்சார்யா, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ராஜஸ்தான் முதல்வர் முதல்வர் சோகத் கல்ஹாத் பூபேஷ் பாகேல், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் பதவியேற்பு விழாவுக்கு வர ஒப்புக் கொண்டுள்ளார்.
அதே நேரத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷரத் பவார், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், முன்னாள் கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி, சிபிஐ பொதுச் செயலாளர் டி.ராஜா, சிபிஐஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் பல பெரிய தொழிலதிபர்கள் ஆகியோரும் இந்த விழாவிற்கு வருகை தர உள்ளனர்.
ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ராஞ்சிக்கு வந்துள்ளதாகவும், ஹேமந்த் சோரன் சனிக்கிழமை அன்று சந்தித்து அழைப்பு விடுத்ததார் என்றும் அவர் கூறினார்.
அவர்களைத் தவிர, சிபிஐ தேசிய செயலாளர் அதுல் அஞ்சன், காங்கிரஸ் தலைவர்கள் ஆர்.பி.என் சிங், அப்துல்பாரி சித்திகி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ராஞ்சிக்கு வந்துள்ளனர். ஹேமந்த் சோரன் பதவியேற்பு நிகழ்ச்சி மதியம் 2 மணிக்கு மொஹாபாபாதி மைதானத்தில் நடைபெறும் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், மொரஹாபாதி மைதானத்தில் சத்தியப்பிரமாணம் நிகழ்ச்சி மதியம் 2 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை இருக்கும் என்று ராஜ் பவன் வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னர், புதிதாக பதவியேற்ற முதல்வர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள், வெளியில் இருந்து வந்த விருந்தினர்கள் மற்றும் பிற பிரமுகர்களுக்காக ராஜ் பவனில் மாலை 3 மணி முதல் மாலை 4 மணி வரை ஒரு ஆலோசனை கூட்டம் மற்றும் உயர் தேநீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் டாக்டர் ராமேஸ்வர் ஓரான் மற்றும் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆலம்கீர் ஆலம் ஆகியோர் ஜார்கண்டின் பரிந்துரைக்கப்பட்ட முதல்வரான ஹேமந்த் சோரனுடன் பதவியேற்பார்கள். இதை மாநிலத்தில் காங்கிரசின் செயல் தலைவர் ராஜேஷ் தாக்கூர் உறுதிப்படுத்தியுள்ளார்.
81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டபேரவையில் (Jharkhand Election Results 2019) காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 30 தொகுதிகளிலும், ராஸ்ட்ரிய ஜனதா தளம் 1 ஒரு தொகுதி என மொத்தம் 47 இடங்களில் பெரும்பான்மையை விட அதிக தொகுதியில் வெற்றி பெற்றது. சுயேச்சை உட்பட மற்ற கட்சிகள் 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த பாஜக (BJP) தனியாக போட்டியிட்டு, வெறும் 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.