பணம் படைத்தவர்களுக்கு ஒரு சட்டம், இல்லாதவர்களுக்கு ஒரு சட்டம்: நீதிபதி வருத்தம்

வசதி படைத்தவர்களுக்கு கிடைக்கக்கூடிய நீதி பாமர மக்களுக்கு கிடைப்பதில்லை, இந்த இடைவெளியை போக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா கூறியுள்ளார்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 10, 2021, 05:17 PM IST
பணம் படைத்தவர்களுக்கு ஒரு சட்டம், இல்லாதவர்களுக்கு ஒரு சட்டம்: நீதிபதி வருத்தம் title=

இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 5,569 கைதிகள் காவல் நிலையங்களில் உயிரழந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது.

தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் மூலம் பொதுமக்களின் வசதிக்காக சட்ட உதவிகளுக்கான மொபைல் செயலி அறிமுக நிகழ்ச்சி டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. சட்ட உதவி கோரும் விண்ணப்பத்தை நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் சமர்ப்பிக்கும் சட்ட உதவி சேவைகள் செயலியை உச்சநீதிமன்ற (Supreme Court) தலைமை நீதிபதி என்.வி.ரமணா (Chief Justice of India) வெளியிட்டார்.

பின்னர் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா (N. V. Ramana) பேசினார். அப்பொழுது, காவல் நிலையங்களில் "மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தல் மற்றும் பிற துயரங்கள் சாமானியர்களுக்கு ஏற்படுகின்றன. சமூகத்தை சட்டம் ஆளுகிறது. ஆனால் வசதி படைத்தவர்களுக்கு கிடைக்க கூடிய நீதி பாமர மக்களுக்கு கிடைப்பதில்லை. இந்த இடைவெளியை போக்க வேண்டும். நீதி என்பது எல்லோருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் அதுவே ஜனநாயக கடமையும் கூட.

ALSO READ: உச்ச நீதிமன்ற வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க அனுமதி அளித்தார் தலைமை நீதிபதி

முதலில் எளிய மக்களுக்கு நாம் இருக்கிறோம் என்ற உணர்வினை ஏற்படுத்த வேண்டும். ஏனெனறால் எளிய மக்கள் நீதி அமைப்புக்கு வெகு தொலைவில் இருக்கிறார்கள். இன்று நாம் வெளியிடும் இந்த மொபைல் செயலியானது ஏழை மக்களுக்கும் சட்டம் சார்ந்த உதவி தேவைப்படுகிறவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

நாட்டில் காவல் நிலையங்களில் (Police Station) மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தல் மிக அதிகமாக உள்ளது. உடல் ரீதியான சித்ரவதைகளும் காவல் நிலையங்களில் நிலவுகின்றது. இப்பிரச்சினை நம்முடைய சமூகத்தில் அதிகரித்து வருகின்றது. இது மிகுந்த கவலையளிக்கிறது.

மனித உரிமைகள் தொடர்பாக அரசியல் சட்டத்தில் உத்தரவாதம் மற்றும் பிரகடனங்கள் உள்ள போதும் காவல் நிலையங்களில் விசாரணைக்காக கைது செய்யப்பட்டு காவல் நிலையங்களில் பிடித்து வைக்கப்படும் நபருக்கு பெரும் அச்சுறுத்தல் மற்றும் தீங்கு விளைவிக்க கூடிய நிலமைகள் நம் நாட்டில் அதிகமுள்ளது. இந்த தவறான போக்கு குறித்து காவல் துறையினருக்கு சரியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு காவல் நிலையம் அல்லது சிறைச்சாலைகளில் இலவச சட்டஉதவி சேவைகள் சம்பந்தமான விழிப்பணர்வு பலகைகள் நிறுவப்பட வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா கூறினார்.

ALSO READ: புதிய தலைமை நீதிபதி ரமணா வழங்கிய முக்கிய தீர்ப்புகள்...

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News