இந்தியை விரும்பாதவர்கள் அயல் நாட்டுக்கார்கள் - உ.பி அமைச்சர் திமிர் பேச்சு

இந்தி மொழியை விரும்பாதவர்கள் அயல்நாட்டுக்காரர்கள் என உத்தரப்பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத் திமிராக பேசியுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 29, 2022, 12:36 PM IST
  • இந்தியை விரும்பாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்
  • இந்தியாவில் இருந்தால் இந்தி மொழியை விரும்ப வேண்டும்
  • உத்தரப்பிரதேச அமைச்சர் பேச்சால் எழுந்தது சர்ச்சை
இந்தியை விரும்பாதவர்கள் அயல் நாட்டுக்கார்கள் - உ.பி அமைச்சர் திமிர் பேச்சு title=

இந்தி மொழி குறித்த விவாதம் நாடு தழுவிய அளவில் எழுந்துள்ளது. அண்மையில் நாடாளுமன்ற அலுவல் மொழிக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆங்கிலத்துக்கு பதிலாக அனைவரும் இந்தியை பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அந்நிய மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை குறைத்து, இந்திய மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க | கலைக்கு மொழி தடையில்லை... எங்கள் படங்களையும் ரசியுங்கள் - அஜய் தேவ்கனுக்கு நடிகை பதிலடி

அவர் பற்ற வைத்த இந்தப் பொறி  நாடு முழுவதும் புகைந்து கொண்டே இருக்கிறது. விக்ரம் ராணா பட விழாவில் பேசிய நடிகர் கிச்சா சுதீப்,  இந்தி மொழிப் படங்களும் தென்னிந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுவதால், இந்தி மொழி தேசிய மொழியாக இருக்க முடியாது எனத் தெரிவித்தார். அவருடைய பதிவுக்கு பதிலளித்த அஜய் தேவ்கன், தாய் மொழிப் படங்களை ஏன் இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்?, இந்தி தான் இப்போதும் எப்போது தேசிய மொழி எனக் கூறியிருந்தார். அவரின் இந்தப் பதிவு சமூகவலைதளங்களில் வைரலானது மட்டுமில்லாமல் விவாதத்தையும் கிளப்பியது.

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தாராமையா  உள்ளிட்ட பலர் அஜய் தேவ்கனுக்கு பதிலடி கொடுத்துள்ளனர். இந்தி ஒருபோதும் தேசிய மொழியாக இருக்க முடியாது என தடாலடியாக தெரிவித்துள்னர். இதேபோல், நடிகை ரம்யாவும் அஜய் தேவ்கனுக்கு சமூகவலைதளத்தில் பதிலடி கொடுத்தார். 

மேலும் படிக்க | ரூ.70-க்கு பெட்ரோலை விற்கத் தயார், ஆனால்?... மத்திய அரசை சாடிய தெலங்கானா அமைச்சர்

இந்த விவகாரம் சென்றுகொண்டிருக்கும் சூழலில், உத்தரப்பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத், இந்தி மொழியை விரும்பாதவர்கள் அயல்நாட்டுக்கார்கள் அல்லது அந்நிய நாட்டுக்காரர்களுடன் இணைந்து சதி செய்பவர்கள் என கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியாவில் வசிக்கிறீர்கள் என்றால், இந்தியை விரும்ப வேண்டும், இல்லையென்றால் நாட்டை விட்டு வெளியேறி வேறு எங்காவது சென்றுவிடுங்கள் என்றும் கூறியுள்ளார். மாநில மொழிகள் மதிக்கப்பட வேண்டும் என்றாலும், இந்திக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என சஞ்சய் நிஷாத் தெரிவித்துள்ளார். அவரின் இந்த திமிர் பேச்சுக்கு சமூகவலைதளங்களில் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News