26 January 2020, 10:13 AM
முப்படை வீரர்கள் குடியரசு தலைவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். முப்படை வீரர்களின் மரியாதையை ஏற்றுக்கொள்கிறார் குடியரசுத் தலைவர்.
Delhi: Sikh Light Infantry Regiment is led by Major Anjum Gorka of 6th Battalion of the Sikh Light Infantry
Regiment. The motto of the Regiment is ‘Deg Teg Fateh’
and the war cry is ‘Jo Bole So Nihal, Sat Shri Akal’. pic.twitter.com/B7B6k4Qjui— ANI (@ANI) January 26, 2020
26 January 2020, 10:10 AM
இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் 71 வது குடியரசு தினத்தன்று ராஜ்பாத்தில் தேசியக் கொடி ஏற்றினார்.
71வது குடியரசு தின கொண்டாட்டத்தின் போது நாட்டுக்காக உயிர் துறந்த வீரர்களுக்கு பிரதமர் மரியாதை!
நாடு முழுவதும் 71வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் முப்படையினரின் அணிவகுப்பு, பல்வேறு மாநிலங்களின் கலை மற்றும் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடபெறுவதால், ராஜபாதை முதல் செங்கோட்டை வரையிலான பகுதிகள் கடந்த சில நாட்களாக பாதுகாப்பு வளையத்தில் இருந்து வருகிறது. 22,000 டெல்லி போலீசார், துணை ராணுவ படைவீரர்கள் பல்வேறு குழுக்களாக ஒருங்கிணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
டெல்லியில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செங்கோட்டை, சாந்தி சவுக் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட இடங்கள் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்நிலையங்களில் தீவிர சோதனைகள் நடத்தப்படுகின்றன. சந்தேகத்திற்குரியவர்களை முக அங்கீகாரம் முறையில் பரிசோதிப்பதற்காக பல இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் சிறப்பு ஆயுதப்படை காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இது தவிர 48 கம்பெனிகளை சேர்ந்த சிறப்பு ஆயுதப்படையினரும் டெல்லி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை என்எஸ்ஜி, எஸ்பிஜி மற்றும் ஐடிபிபி போன்ற அமைப்புக்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.
டெல்லியில் பாரா கிளைடர்கள், பாரா மோட்டார்கள், ஹேங் கிளைடர்கள், ஆளில்லா சிறிய விமானங்கள், இலகுரக விமானம், ரிமோட் மூலம் இயக்கப்படும் விமானம், ஹாட் ஏர் பலூன்கள் ஆகியவை பறக்க அடுத்த மாதம் 15ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மும்பையின் முக்கிய சாலைகளில் விடிய விடிய போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். வாகன கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு படைத் தலைவர் பிபின் ராவத், முப்படை தளபதிகள் ஆகியோரும் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.