மேற்கு வங்க பெயர் மாற்ற மாநில அரசு முடிவு

Last Updated : Aug 2, 2016, 05:39 PM IST
மேற்கு வங்க பெயர் மாற்ற மாநில அரசு முடிவு title=

மேற்கு வங்க பெயரை மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஆங்கிலத்தில் "பெங்கால்" எனவும், பெங்காலி மொழியில் "பங்கா" எனவும் பெயர் மாற்ற மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பெயர் மாற்றத்திற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறப்பு சட்டசபை கூட்டத்தை வரும் 26-ம் தேதி கூட்டவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சக கூட்டங்களில், மாநிலத்தின் அதிகாரிகளுக்கு வாய்ப்பு கிடைக்க நீண்ட நேரமாவதால், மாநிலத்தின் பெயரை மாற்ற மம்தா முடிவு செய்ததாக கூறப்படுகிறது. 

அகர வரிசைப்படி வாய்ப்பு வழங்கப்படுவதால், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக மம்தா பல முறை புகார் கூறியிருந்தார்.

பெயர் மாற்றம் தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற பின்னர், மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்னர், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

Trending News