கெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கினை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது!

Last Updated : Jun 19, 2018, 12:31 PM IST
கெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கினை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு! title=

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தான் செயல்படுத்தும் திட்டங்களை, மத்திய அரசு முடக்கி வருவதாக கூறி, கடந்த 9-நாட்களாக ஆளுநர் மாளிகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடன், சில அமைச்சர்களும் இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

இதையடுத்து, டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேரில் சென்று ஆதரவு அளித்துள்ளனர்.

இதற்கிடையே, கெஜ்ரிவால் போராட்டத்திற்கு எதிராகவும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கோரியும் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவை நேற்று விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், கவர்னர் அலுவலகத்திற்குள் போராட்டம் நடத்துவதற்கு கெஜ்ரிவாலுக்கு யார்? அனுமதி அளித்தது என்று கேள்வி எழுப்பியது. இந்த மனுக்கள், மீதான அடுத்த கட்ட விசாரணை வரும் ஜூன் 22 ஆம் தேதி நடைபெறும் என்று கருத்து தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், தர்ணா போராட்டம் தொடர்பாக, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக வழக்கறிஞர் சாஷாங்க் தியோ என்பவர், தொடர்ந்துள்ள மற்றொரு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Trending News