வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி கிராமங்களுக்காக அஞ்சல்துறை வங்கியை தொடங்கி வைக்கிறார் மோடி!
உலகிலேயே மிகவும் பரவலான அஞ்சல் சேவையை வழங்குகிறது இந்திய அஞ்சல் துறை. இந்தியாவின் பல்வேறு கிராமங்களிலும், நவீன தொழில்நுட்பங்கள் இன்னும் தொட்டுக்கூட பார்க்காத இடங்களிலும் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
ஏற்கெனவே வங்கியில் சேமிப்பு கணக்கை வைத்திருப்பைத் போல, அஞ்சல் சேமிப்பு வங்கியில் 17 கோடி பேர் வரை கணக்கு வைத்துள்னனர். இந்நிலையில், புதிதாக இந்திய அஞ்சல் பணப்பட்டுவாடா வங்கியை தொடங்கியுள்ளது மத்திய அரசு. இந்த வங்கிக்கு ஏரளாமான கிளைகள் உள்ள நிலையில், மேலும் புதிதாக 648 கிளைகளை திறக்க முடிவு செய்துள்ளது.
இந்த சேவையை வரும் ஆகஸ்டு 21 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் அஞ்சல் பணப்பட்டுவாடா வங்கி கிளை திறக்கப்படவுள்ளது. அதன்பின் இதனை மேலும் அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.