சத்தீஸ்கர் மாநில எஃகு ஆலை வெடி விபத்தில் பலியானவர்களின் எண்சணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள எஃகு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் இதுவரை 13 பலியாகியுள்ளதாகவும், 14 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகல்கள் தெரிவிக்கின்றன.
சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்பூரில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொளைவில் உள்ள பிலாய் பகுதியில் மாநில அரசால் எஃகு ஆலை நடத்தப்பட்டு வருகிறது. இன்று காலை 11 மணியளவில் இந்த ஆலையில் எரிவாயு பைப் வெடித்து விபத்துக்குள்ளனாது. இந்த விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 14 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Chhattisgarh: Visuals from outside a hospital in Bhilai; 6 people have died and 14 injured in a gas pipeline blast in Bhilai Steel Plant. pic.twitter.com/aQGFNr3LIg
— ANI (@ANI) October 9, 2018
எரிவாயூ பைப்பில் இருந்து வாயூ வெளியேறிக்கொண்டே இருப்பதால் மீட்பு பணி பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.
இந்த ஆலையில் இவ்வாறு விபத்து நிகழ்வது இது முதன்முறை அல்ல, கடந்த 2014-ஆம் ஆண்டு இதேப்போன்ற வெடிவிபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் இரண்டு உயர் அதிகாரிகள் உள்பட 6 பேர் பலியாகினர். 50-க்கும் அதிகமானோர் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய ஸ்டீல் ஆணையம் (SAIL) நிர்வகிக்கும் பிலாய் எஃகு ஆலை, நாட்டின் சிறந்த ஒருங்கிணைந்த ஆலைக்கான பிரதமரின் விருதினை 11 முறை பெற்றுள்ளது. முன்னாள் சோவியத் யூனியனின் உதவியுடன், 1955-ஆம் ஆண்டு பிலாய் எஃகு ஆலை நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது!