கொச்சி: பாப்புலர் ஃப்ரண்ட் (PFI ) மற்றும் அதன் மாணவர் பிரிவான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (CFI) மேற்கொண்ட பண மோசடி குறித்து அமலாக்க பிரிவு (ED) PFI வங்கிக் கணக்குகளில் ₹100 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
கொச்சியில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் (PMLA) பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் ED இந்த தகவலை வெளியிட்டது. CFIயின் தேசிய பொதுச் செயலாளரான கே.ஏ. ரவூப் ஷெரிப்பின் காவலை மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
"பி.எஃப்.ஐ.க்கு எதிராக ED நடத்திய விசாரணையில் இதுவரை 100 கோடிக்கும் அதிகமானவை பி.எஃப்.ஐயின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன என்பதும், அதில் மிகப் பெரிய பகுதி ரொக்கமாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது. 2013 முதல், பி.எஃப்.ஐ பல்வேறு திட்டமிடப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டு வருகிறது, மேலும் 2014 க்குப் பிறகு பணப் பரிமாற்றம் மற்றும் முதலீடுகள் கணிசமாக அதிகரித்துள்ளன, ”என்று ED அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
ALSO READ | தாகூரின் சிந்தனையில் இருந்து உதித்தது தான் தற்சார்பு இந்தியா: பிரதமர் மோடி
CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் PFI ஈடுபட்டுள்ளதாகவும் ED அறிக்கை கூறியது. "டிசம்பர் 2019 முதல் பிப்ரவரி 2020 வரையிலான காலப்பகுதியில், இந்த நிதி சிஏஏ எதிர்ப்பு போராட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம். பிப்ரவரி 2020 டெல்லி கலவரத்தில் பிஎஃப்ஐ தலைவர்கள் மற்றும் பல பி.எஃப்.ஐ உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர். பெங்களூரில் அண்மையில் நடந்த வன்முறைகளுக்கும், பி.எஃப்.ஐக்கும் தொடர்பு இருப்பதற்கான அறிகுறிகளும் உள்ளன "என்று அந்த அறிக்கை கூறியது.
பி.எஃப்.ஐ உடன் தொடர்புடைய நபர்கள் தங்கியுள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடல் நடவடிக்கையின் போது, வெளிநாட்டிலிருந்து நிதி திரட்டப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. "வெளிநாட்டில் இருந்து பெறும் நிதிகளுக்கான வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த நிதிகளை திரட்டுவதற்காக பிஎஃப்ஐ உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த வெளிநாட்டு நிதிகள் பிஎஃப்ஐயின் வங்கிக் கணக்குகளில் பிரதிபலிக்காததால், அவை ஹவாலா அல்லது மறைமுகமாக, மோசடியான முறையில் அனுப்பப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது" என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
ED முன்வைத்த வாத்கத்தை கேட்ட நீதிமன்றம் அவரது காவலை மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்க அனுமதி அளித்தது. இந்த மாத தொடக்கத்தில் வெளிநாடு செல்ல முயன்றபோது திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரவூப் தடுத்து நிறுத்தப்பட்டார்.
ALSO READ | FIR பதியலையா.. சாலையை ஒரு வாரம் சுத்தம் பண்ணுங்க.. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR