காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல்! உளவுத்துறை எச்சரிக்கை!

காஷ்மீரில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் பிடிக்க முயன்றபோது என்கவுண்டர் நடைபெற்றது.இதில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 6, 2021, 01:30 PM IST
காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல்! உளவுத்துறை எச்சரிக்கை! title=

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் பிடிக்க முயன்றபோது என்கவுண்டர் நடைபெற்றது.இதில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். மேலும் எல்லை வழியாக காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை உளவுத்துறை அமைப்புகள் ரகசியமாக கண்காணித்து அடிக்கடி தகவல்களை அளித்து வருகின்றனர். இந்நிலையில் வடக்கு காஷ்மீரில் வெளிநாட்டை சேர்ந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக உளவுத்துறை எச்சரித்திருக்கிறது.  பாராமுல்லா, பந்தி போரா, குப்போரா ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு காஷ்மீரில் உள்ளூர் பயங்கரவாதிகளை விட வெளிநாட்டு பயங்கரவாதிகள் அதிக அளவில் உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

kashmir

போலீசாரின் சமீபத்திய தகவல்களின்படி ஜம்மு காஷ்மீரில் உள்ளூர் பயங்கரவாதிகள் 11 பேர் உள்ளனர் என்றும், 40 முதல் 50 வெளி நாட்டு பயங்கரவாதிகள் செயல்படுகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.  பயங்கரவாதிகளின் மையமாக இருந்த தெற்கு காஷ்மீருடன் ஒப்பிடும் போது கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக வடக்கு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதையடுத்து அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உள்பட ஏராளமான பயங்கரவாதிகளை விடுவித்தனர்.  இதில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சித்து வருவதாக சமீபத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் வட காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் இருந்து ஊடுருவினார்களா…???? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

ஆனால் இதனை போலீசார் உறுதிப்படுத்தவில்லை.வெளிநாட்டு பயங்கரவாதிகளின் எண்ணிக்கை நீண்ட காலமாக அதிகரித்து வருகிறது. இதனுடன் ஆப்கானிஸ்தானின் சமீபத்திய சூழ்நிலைகளுடன் ஒப்பிடமுடியவில்லை என்றார்.  வடக்கு காஷ்மீரில் வெளிநாட்டு பயங்கரவாதிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் முக்கிய தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுவதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய தலைவர்கள் உள்பட மக்கள் பிரதிநிதியிடம் வெளியில் சென்றால் செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதவை என ஆலோசனைகளை போலீசார் வழங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ உலக தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடியே மிக பிரபலம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News