7 மாவோயிஸ்ட்கள் என்கவுன்டர்... சிக்கிய முக்கிய தலைவர்... தெலங்கானாவில் பரபரப்பு

Telangana Maoist Encounter: தெலங்கானா மாநிலத்தில் மாவோயிஸ்ட் குழுவை சேர்ந்த 7 பேரை, மாவோயிஸ்ட் ஒழிப்பு படையினர் சுட்டு வீழ்த்தி உள்ளனர். இதன் விரிவான தகவல்களை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 1, 2024, 01:13 PM IST
  • தெலங்கானா - சத்தீஸ்கர் எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகரிப்பு
  • மாவோயிஸ்ட்கள் கடந்த வாரம் இரண்டு பேரை கொலை செய்துள்ளனர்.
  • இந்த இரண்டு பேரும் போலீசாருக்கு துப்புக் கொடுப்பவர்கள் ஆவர்.
7 மாவோயிஸ்ட்கள் என்கவுன்டர்... சிக்கிய முக்கிய தலைவர்... தெலங்கானாவில் பரபரப்பு title=

Telangana Maoist Encounter: தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் இன்று காலை போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர். அதில் மாவோயிஸ்ட் தலைவர் ஒருவரும் அடக்கம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் போலீசாருக்கு தகவல் அளித்து வந்த 2 பழங்குடியினர்களை கொலை செய்ததை தொடர்ந்து, போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முலுகு மாவட்டத்தின் சல்பாகா வனப்பகுதியில் மாவோயிஸ்ட்களுக்கும், மாவோயிஸ்ட் ஒழிப்பு படையினர்களுக்கும் இன்று அதிகாலை 5.30 மணியளவில் மோதல் நடந்ததாக கூறப்படுகிறது. மாவோயிஸ்ட் ஒழிப்பு படையினர் (Elite Anti-Maoist Greyhounds Force) மாவாயிஸ்ட் குழுவினர் வனப்பகுதியில் இருக்கும் இடத்தை கண்டறிந்து, இன்று அதிகாலையில் அவர்களை சுற்றிவளைத்தனர். மேலும் தங்களிடம் சரண் அடையுமாறு போலீசார் தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

சுட்டு வீழ்த்தப்பட்ட 7 பேர்

எனினும், போலீசார் மீது மாவோயிஸ்ட்கள் தாக்குதல் தொடுத்த நிலையில், எதிர்தாக்குதலாக போலீசார் மாவோயிஸ்ட்கள் மீது எதிர்தாக்குதல் மேற்கொண்ட நிலையில், 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 7 பேரில் 35 வயதான பத்ரு என்கிற குர்சம் மங்கு என்கிற பாப்பண்ணாவும் அடக்கம். இவர் சிபிஐ (மாவோயிஸ்ட்) குழுவின் யெல்லாண்டு-நரசம்பேட் பகுதிக் குழுத் தளபதியும், தெலுங்கானா மாநிலக் குழு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 10th மற்றும் 12th படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..எழுதப்படிக்க தெரிந்தால்போதும்!!

போலீசார் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் குர்சம் மங்கு மட்டுமின்றி எகோலபு மல்லையா (43), முசாகி தேவல் (22), முசாகி ஜமுனா (23), ஜெய் சிங் (25), கிஷோர் (22), மற்றும் கமேஷ் (23) உள்ளிட்டோரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாவோயிஸ்ட் படையினர் ஏகே-47, ஜி3 மற்றும் ஐஎன்எஸ்ஏஎஸ் துப்பாக்கிகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் அவற்றை போலீசார் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. 

அதிகரிக்கும் மாவோயிஸ்ட் நடமாட்டம்?

முன்னதாக, இது முலுகு மாவட்டத்தில் போலீசாருக்கு தகவல் அளித்த வந்த பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து செயலாளர் உட்பட இருவரை கடந்த நவ. 22ஆம் தேதி அன்று மாவோயிஸ்ட் குழுவினர் கொன்றதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம், கரககுடம் பகுதியின் ரகுநாதபாலம் அருகே உள்ள வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் ஆறு மாவோயிஸ்டுகளை சுட்டு வீழ்த்தினர்.

தெலங்கானா - சத்தீஸ்கர் மாநில எல்லையில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இதையொட்டி, தெலங்கானா காவல்துறை டிஜிபி ஜிதேந்தர் கடந்த மாதம் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒரு முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தினார். குறிப்பாக, டிஜிபி தலைமையில் முழுகு, ஜெயசங்கர் பூபாலப்பள்ளி, பத்ராத்ரி கொத்தகுடம் உள்ளிட்ட மாவட்டங்களின் காவல்துறை அதிகாரிகளுடன் மாவோயிஸ்ட் ஊடுருவலை தடுக்கும் விதமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நவம்பர் 11ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடத்தியிருந்தது கவனிக்கத்தக்கது.

மேலும் படிக்க | New Rules From December | டிசம்பர் 1 முதல் அமலுக்கு வந்த 5 முக்கிய அறிவிப்புகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News