JNU-வில் சுவாமி விவேகானந்தரின் சிலை உடைப்பு; அதன் மீது அநாகரீகமான கருத்து எழுதினர்

சுவாமி விவேகானந்தரின் சிலை மீது செங்கல் கற்களை வீசியதோடு, சிலை மீது அநாகரீகமான செய்திகளையும் எழுதியுள்ளனர். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 14, 2019, 04:17 PM IST
JNU-வில் சுவாமி விவேகானந்தரின் சிலை உடைப்பு; அதன் மீது அநாகரீகமான கருத்து எழுதினர் title=

புது தில்லி: டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (Jawaharlal Nehru University) வளாகத்தில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தரின் (Swami Vivekananda) சிலையை சில சமூக விரோத சக்திகள் சேதப்படுத்தியுள்ளன. சிலை மீது சிலர் செங்கல் மற்றும் கற்களை வீசினர் என்று செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ (ANI) தெரிவித்துள்ளது. மேலும் சிலை மீது அநாகரீகமான செய்திகளையும் எழுதியுள்ளனர். இதன் பின்னர் சிலை துணியால் மூடப்பட்டு, இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சுவாமி விவேகானந்தரின் இந்த சிலை ஜே.என்.யூ வளாகத்தில் உள்ள நிர்வாகத் தொகுதியின் வலதுபுறத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. அதற்கு முன்னால் ஜவஹர்லால் நேருவின் சிலை இருக்கிறது என்பதை உங்களுக்குச் சொல்கிறோம். பல்கலைக்கழகத்தின் நிர்வாக அலுவலகத்தில் இருக்கும் துணைவேந்தரைச் சந்திக்க சில மாணவர்கள் வந்தபோது இந்த சம்பவம் குறித்து தெரிந்தது. ஏற்கனவே பல்கலைக்கழகத்தின் மற்றொரு இடத்தில் விடுதிகளின் கட்டணம் அதிகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் அனைவரும் கூடியிருந்தனர்.

 

நேற்று (புதன்கிழமை) மாணவர்கள் துணைவேந்தரைச் சந்திக்க வந்தபோது, அவர் அங்கு இல்லை. அதுமட்டுமில்லாமல் அங்கு வேறு எந்த அதிகாரியும் இல்லாததால், கோபமடைந்த மாணவர்கள் துணைவேந்தர் அலுவலகத்திந சுவர்களில் செய்திகளை எழுதினார்கள். அதில் ஒரு செய்தியில், நீங்கள் எங்கள் அதிபர் அல்ல என்று மாணவர்கள் எழுதியுள்ளனர். மேலும் சில செய்திகளில் "நிரந்தரமாக விடைபெறுகிறோம்" போன்ற சொற்களும் எழுதப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து டெல்லி காவல் துறை விசாரித்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்களால் பல்கலைக்கழக நிர்வாகம் வேதனை அடைந்துள்ளது.

முன்னதாக நேரு பல்கலைக் கழகத்தின் விடுதி கட்டணம் 300 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது. அதோடு, ஆடைக்கட்டுப்பாடு, நேரக்கட்டுபாடு உள் பட பல  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கு மாணவர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது கடந்த ஒரு வாரமாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் மாணவர்கள் கோரிக்கையை நேரு பல்கலைக் கழக நிர்வாகம் நிராகரிக்கப்பட்டது.

அனாலும் ஜே.என்.யூ மாணவர்களின் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் விடுதி கட்டண உயர்வை திரும்பப் பெற்றுள்ளது என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (HRD) நேற்று (புதன்கிழமை) அறிவித்தது. 

இந்த முடிவைப் பற்றி கல்விச் செயலாளர் ஆர்.சுப்பிரமணியம் (Subrahmanyam) தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், விடுதி கட்டணத்தில் பெரும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது, பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகளின் (Economically Weaker Sections) மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தையும் இந்த அமைப்பு முன்மொழிந்துள்ளது. மீண்டும் வகுப்புகளுக்குச் செல்லும் நேரம் இது" என தெரிவித்தார்.

 

ஒரு அறைக்கான விடுதி கட்டணம் ரூ.10 லிருந்து 300 ஆக உயர்த்தப்பட்டது. இப்போது அது ரூ.100 ஆக குறைக்கப்பட்டதும், இரட்டை அறைக்கான கட்டணம் ரூ.20 லிருந்து ரூ.600 ஆக உயர்த்தப்பட்டது. போராட்டத்திற்கு பின்னர் ரூ.200 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Trending News