லோக்பால் அமைப்பதற்கான கெடு குறித்து 10 நாட்களில் தெரிவிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
ஊழல் மற்றும் லஞ்சம் குறித்த புகார்களை விசாரிக்கும் நடுவர் அமைப்பான லோக்பால் என்ற அமைப்பை அமைப்பதற்கு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2017 ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால், மத்திய அரசு இதுவரை லோக்பால் அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பானுமதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்துள்ளது.
இதை தொடர்ந்து, விசாரணையில் "நீதிமன்றம் உத்தரவிட்டும் இது வரை லோக்பால் அமைப்பை ஏற்படுத்தாதது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். "மத்திய அரசு விரைந்து லோக்பால் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் எனவும் லோக்பால் அமைப்பதற்கான காலக்கெடு குறித்து 10 நாட்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்" எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Supreme Court seeks a report from the Union of India about appointment of Lokpal. SC asks Union of India to file a fresh affidavit in 10 days and mention the details as to how long will each step take & by when Lokpal can be appointed.
— ANI (@ANI) July 2, 2018