Demonetization Supreme Court Justice BV Nagaratna: 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அன்று நாடு முழுவதும் மத்திய பாஜக அரசால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின் மூலம் அப்போது புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பால் அப்போது நிதித்துறையிலும், அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது மக்கள் தங்களிடம் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்திக் கொண்டு, புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து, கடந்தாண்டு 2000 ரூபாய் நோட்டுகளையும் இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற்றுக்கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஒரு நீதிபதி மட்டும் எதிர்ப்பு
அந்த வகையில், 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக 57 மனு தாக்கல் செய்த நிலையில், அதில் கடந்தாண்டு ஜனவரி 2ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அமர்வால் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் பி.வி. நாகரத்னா மட்டுமே எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் மீதம் உள்ள நால்வரும் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா மத்திய பாஜக அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்தும், அவரின் தீர்ப்பு குறித்தும் பேசியுள்ளார். ஹைதராபாத் நகரில் உள்ள NALSAR சட்ட பல்கலைகழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிமன்றங்களின் அறிமுக அமர்வு மற்றும் அரசியலமைப்பு மாநாடு 2024 நிகழ்வில் இன்று பங்கேற்றார். அந்த நிகழ்வில் பி.வி. ரத்னா, கடந்தாண்டு பணமதிப்பிழப்பு வழக்கில் அளித்த தீர்ப்பு குறித்தும் பேசினார்.
98% நோட்டுகள் திரும்பி வந்த பின் என்னாச்சு...?
பணமதிப்பிழப்பு வழக்கு விசாரிக்கப்பட்ட அந்த அமர்வில் தான் இடம்பெற்றது தனக்கு மகிழ்ச்சியளித்ததாகவும் கூறினார். மேலும் அதுகுறித்து அவர் பேசுகையில், "2016இல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டது. அந்த சமயத்தில் மொத்தமாக புழக்கத்தில் இருந்த நோட்டுகளில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் மட்டும் 86 சதவீதம் இருந்தது. ஆனால், இதனை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என நினைக்கிறேன்.
கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற பணமதிப்பிழப்பு, ஒரு நல்ல வழி என்று முன்பு நினைத்திருந்தேன்; அதன் பிறகு அந்த நோக்கம் என்ன ஆனது என்பதே தெரியவில்லை. 98 சதவீத 500, 1000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பிய நிலையில், அதன் பிறகான வருமான வரி நடவடிக்கைகள் என்ன ஆனது?. நமக்கு தெரியாது.
எனவே ஒரு சாமானியனின் இக்கட்டான நிலை என்னை மிகவும் கிளர்ந்தெழச் செய்தது. எனவே, தான் பணமதிப்பிழப்பு வழக்கில் எதிர்த்து தீர்ப்பு வழங்கினேன். பணமதிப்பிழப்பு மேற்கொள்ளப்பட்ட முறை என்பதும் சரியானது அல்ல. 2016இல் அவசர அவசரமாக செய்யப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அப்போதைய நிதி அமைச்சருக்குக் கூடத் தெரியாது என்கிறார்கள் சிலர்.
மேலும் படிக்க | 4 பேருக்கு பாரத ரத்னா விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ