உத்தரபிரதேசம்: நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று (COVID-19 Pandemic) எண்ணிக்கையை அடுத்து மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளும் மீண்டும் தக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். பல மாநிலங்களில், முழு ஊரடங்கு (Lockdown) மற்றும் இரவு ஊரடங்கு (Night Curfew) உத்தரவு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. உத்தரபிரதேச அரசு மார்ச் 8 முதல் 24 வரை பள்ளிகளையும் மூடியுள்ளது. இது தவிர, ஹோலி பண்டிகை (Holi Festival 2021) மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் தொடர்பாக உ.பி. அரசு புதிய வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.
யோகி ஆதித்தியநாத் (Yogi Adityanath) தலைமையிலான உத்தரபிரதேச அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படி, உத்தரபிரதேசத்தில் மதுபானம் மற்றும் நடன விருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹோலி பண்டிகை அன்று மதுபானம் அருந்தி விட்டு, சாலையில் நடனம் ஆடுவது போன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது என மாநில உள்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், ஹோலி (Holi 2021) அன்று விசேச ஏற்பாடுகள் செய்ய விரும்பினால் அனுமதி பெறப்பட வேண்டும். நிர்வாகத்தின் ஒப்புதல் இல்லாமல் எங்காவது ஒரு பொது நிகழ்வு நடந்தால், அதன் அமைப்பாளர்கள் மற்றும் அதில் பங்கேற்கும் மக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ALSO READ | அதிகரிக்கும் Corona, இந்த இடங்களில் மீண்டும் Lockdown போடப்படுமா?
இது தொடர்பாக மாநில தலைமைச் செயலாளர் ஆர்.கே.திவாரி அனைத்து மாவட்ட ஆட்சியர், தாசில்தார் மற்றும் மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.
Amid #COVID19 scare, UP govt issues guidelines ahead of Holi festival; no procession to be carried out without prior permission. People above 60 years of age, children below 10 years of age & people with co-morbodities not to participate pic.twitter.com/P7UCpnIPZ8
— ANI UP (@ANINewsUP) March 23, 2021
உ.பி. அரசாங்கத்தின் புதிய வழிகாட்டுதல் (கொரோனா வழிகாட்டுதல்கள்):
- 8 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளும் (Private & Govt School) மார்ச் 24 முதல் 31 வரை மூடப்படும் என்று புதிய உத்தரவுகளில் கூறப்பட்டுள்ளது.
ALSO READ | COVID-19: இனி MASK வேண்டாம் என தெரிவித்த முதல் மாநிலம் இதுதான்!
- மாநிலத்தில் நடைபெறும் ஊர்வலம், பொது நிகழ்ச்சியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பங்கேற்கக் கூடாது.
- கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் 48 மணி நேரத்திற்குள் கண்டறியப்படும்.
- கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில், ஹோலி பண்டிகைக்கு வீட்டிற்கு திரும்பி வருபவர்களிடம் கட்டாயமாக விசாரிக்கப்படுவார்கள்.
- நகரங்களில் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து மட்டத்திலும் வார்டு மட்டத்திலும் ஒரு நோடல் அதிகாரி நியமிக்கப்படுவார். இது வெளி மாநிலங்களில் இருந்து வரும் மக்கள் தங்கள் விசாரணையை முடித்து, விசாரணை அறிக்கை வரும் வரை வீட்டில் தங்குவதை உறுதி செய்யப்படும்.
- அனைத்து நபர்களும் முகமூடிகளைப் (Face Mask) பயன்படுத்துவது மற்றும் பொது இடங்களில் சமூக தூரத்தைப் (Social Distancing) பின்பற்றுவது கட்டாயமாகும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR